பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இதில் முதலீடு செய்வது வரி இல்லாத மற்றும் பாதுகாப்பான வருமானத்தைத் தரும். இதில் முதலீடு செய்வது வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு அளிக்கிறது. நீண்ட காலத்திற்கு குறைந்த முதலீட்டில் பெரிய நிதியை உருவாக்க இந்தத் திட்டம் சிறந்த வழியாகும்.
4 நாமினிகள் வரை சேர்க்கப்படலாம்: வங்கித் திருத்த மசோதா 2025ன் கீழ், PPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 4 நாமினிகளைச் சேர்க்கும் வசதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் அதிகபட்சம் நான்கு பேரை பரிந்துரைக்கலாம். இது தவிர, சேஃப்டி கஸ்டடி அல்லது சேஃப்டி லாக்கர் இல் வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு நாமினியைச் சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Recently was informed that a fee was being levied by financial institutions for updating/modifying nominee details in PPF accounts.
Necessary changes are now made in the Government Savings Promotion General Rules 2018 via Gazette Notification 02/4/25 to remove any charges on… pic.twitter.com/Hi33SbLN4E— Nirmala Sitharaman (@nsitharaman) April 3, 2025
PPF கணக்கில் நாமினியை எவ்வாறு அப்டேட் செய்வது?:
இப்போது PPF கணக்கில் நாமினியைப் அப்டேட் செய்வது முன்பை விட எளிதாகிவிட்டது. இந்த வேலையை ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் செய்யலாம்.
SBI, HDFC மற்றும் ICICI போன்ற சில வங்கிகள் வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் பாங்கிங் மூலம் விவரங்களைப் அப்டேட் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
1. ஆன்லைன் முறை:
உங்கள் வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் போர்ட்டலில் லாகின் செய்ய வேண்டும்.
PPF அக்கௌன்ட் செக்ஷன்-க்கு செல்லவும்.
“நாமினி அப்டேட்” அல்லது “மாடிஃபை நாமினேஷன்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நியூ நாமினி டீடெயில்ஸ் (பெயர், உறவுமுறை, பெர்ஸன்டேஜ் ஷேர் ஆகியவற்றை) என்டர் செய்யவும்.
OTP அல்லது இன்டர்நெட் பேங்கிங் க்ரிடென்ஷியலை பயன்படுத்தி சரிபார்க்கவும்.
ரெக்வஸ்ட்-ஐ சப்மிட் செய்து, அக்னாலெட்ஜ்மென்ட்-ஐ சேவ் செய்யவும்.
2. ஆஃப்லைன் முறை (அஞ்சல் அலுவலகம் மற்றும் பிற வங்கிக் கிளைகளுக்கு):
உங்கள் வங்கி அல்லது தபால் அலுவலகம், ஆன்லைனில் நாமினியை அப்டேட் செய்ய வேண்டிய வசதியை வழங்கவில்லை என்றால், நீங்கள் ஆஃப்லைன் முறையைப் பின்பற்றலாம்.
வங்கி அல்லது தபால் அலுவலகத்திலிருந்து ஃபார்ம்-Fஐ (நாமினேஷன் ஃபார்ம்) பெற்றுக் கொள்ளவும் அல்லது டவுன்லோட் செய்யவும்.
புதிய நாமினியின் முழு விவரங்களையும் நிரப்பவும் (பெயர், முகவரி, உறவு, ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகள் இருந்தால் பெர்ஸன்டேஜ் ஷேர்).
ஆதார், பான் கார்டு போன்ற உங்களின் அடையாளச் சான்று காப்பியை இணைக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட ஃபார்ம்-ஐ உங்கள் வங்கி கிளை அல்லது தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
April 04, 2025 9:40 AM IST
PPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி.. இனி நாமினி விவரங்களை அப்டேட் செய்ய கட்டணம் இல்லை!