உதாரணமாக, நீங்கள் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதமான 8.20% இல், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ரூ.61,500 கிடைக்கும். அதாவது, மாதத்திற்கு சராசரியாக ரூ.20,500 ஓய்வூதியமாக கிடைக்கும். 5 வருட காலத்தின் முடிவில், உங்கள் ரூ.30 லட்ச அசல் தொகை அப்படியே இருக்கும். மேலும் ரூ.12.30 லட்சம் கூடுதல் வட்டி லாபமும் கிடைக்கும். நிதி நெருக்கடி இல்லாமல் வசதியாக வாழ இந்த திட்டம் ஏற்றதாக இருக்கும்.


