இந்தத் திட்டத்தில் தினமும் 50 ரூபாய் வீதம் மாதம் ரூ.1,500 ஒருவர் டெபாசிட் செய்யும் போது ரூ. 35 லட்சம் வரை ரிட்டர்னாகப் பெற முடியும். மேலும் இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் ரூ.65 போனஸ் வழங்கப்படும். ஒருவர் 19 வயதில் ரூ.10 லட்சத்துக்கு இத்திட்டத்தில் பாலிசி எடுத்தால், 55 ஆண்டுகளுக்குப் பிரீமியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 செலுத்த வேண்டும். அதுவே 58 ஆண்டுகளுக்கு ரூ.1,463 தொகையும், 60 ஆண்டுகளுக்கு என்றால் ரூ.1,411 தொகையும் பிரீமியமாக மாதந்தோறும் செலுத்த வேண்டும்.


