குறிப்பாக, நீங்கள் பெறப்போகும் மாதாந்திர வருமானம், நீங்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்தது. உதாரணமாக, தற்போதைய வட்டி விகிதத்தில் நீங்கள் ரூ.1,50,000 முதலீடு செய்தால், உங்களுக்கு மாதத்திற்கு ரூ.962.50 கிடைக்கும். அதேபோல், நீங்கள் ரூ.3,00,000 முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ. 1,925 கிடைக்கும். நீங்கள் ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9,00,000 முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ.5,775 வட்டி கிடைக்கும். அதே கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ.9,250 (ரூ.15,00,000 × 7.4% ÷ 12 மாதங்கள்) மாதந்தோறும் வட்டி கிடைக்கும்.


