ரூ.3 லட்சம் டெபாசிட் செய்து ரூ.1.23 லட்சம் பெறுவது எப்படி? கிளியர்டாக்ஸின் படி, இன்று நீங்கள் போஸ்ட் ஆபிஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) 3,00,000 ரூபாய் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் சுமார் 1,23,000 ரூபாய் வருமானத்தைப் பெறலாம். இந்தக் கணக்கீட்டின்படி, ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டித் தொகை சுமார் 6,150 ரூபாயாக இருக்கும். அதாவது, 5 ஆண்டுகளின் முடிவில் உங்கள் மொத்தத் தொகை சுமார் 4,23,000 ரூபாயாக இருக்கும்.


