பொதுவாக, வழக்கமான முதலீடு நிண்ட காலத்திற்கு பெரிய வருமானத்தை அளிக்கும் என்று முதலீட்டு நிபுணர்கள் சொல்கிறார்கள். அந்த வகையில், தற்போது சந்தையில் பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. ஆனால், அதில் எவை பாதுகாப்பானது மற்றும் எதில் முதலீடு செய்வது என்ற குழப்பம் மக்களிடையே உள்ளது. இருப்பினும், அரசாங்க திட்டங்கள், பத்திரங்கள், வங்கி வைப்புத் திட்டங்கள் போன்ற முதலீடுகள் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. இதில் ஆபத்து இல்லை.


