உங்கள் மனைவி பெயரில் போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்பு நிதி (RD) கணக்கைத் தொடங்கி, மாதம் ரூ.8,000 வீதம் சேமித்து வந்தால், 5 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ.4.80 லட்சமாக இருக்கும். இதனுடன் வட்டியையும் சேர்த்தால், திட்டத்தின் முடிவில் உங்களுக்குக் கிடைக்கும் தொகை சுமார் ரூ.5.70 லட்சமாக இருக்கும். அதாவது, வட்டி மூலமாகவே நீங்கள் சுமார் ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை வருமானம் ஈட்ட முடியும்.


