நீங்கள் ஒவ்வொரு மாதமும் போஸ்ட் ஆபிஸ் RD கணக்கில் ரூ.1,500 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.90,000 டெபாசிட் செய்திருப்பீர்கள். 6.70 சதவீத வட்டியுடன், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.1.07 லட்சம் பெறலாம். இதேபோல், நீங்கள் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்தால், மொத்த முதலீடு ரூ.60,000 ஆக இருக்கும். வட்டியுடன், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.71,000 பெறலாம்.


