நீங்கள் மாதத்திற்கு ரூ.100 உடன் இந்த திட்டத்தை தொடங்கலாம். இதற்கு நீங்கள் பெரிய தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் மாதத்திற்கு ரூ.500, ரூ.1,000 அல்லது ரூ.10,000 போன்ற ஒரு நிலையான தொகையைத் தேர்ந்தெடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், உங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி கிடைக்கும். உதாரணமாக, நீங்கள் மாதந்தோறும் ரூ.10,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.7,13,659 கிடைக்கும். இதில், நீங்கள் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்து ரூ.1,13,659 வட்டி பெறுவீர்கள்.


