Last Updated:
Pollachi Cattle Market: தென்னிந்தியாவில் புகழ்பெற்ற மாட்டுச் சந்தையாக விளங்கும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் இன்று ரூ.5 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது.
ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புகழ்பெற்ற பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், சுமார் 5 கோடி வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி.
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற மாட்டுச் சந்தையாக விளங்கும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தையானது, வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.
இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் வியாபாரிகள் இந்த மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
இதையும் படிங்க: Best Watermelon: தர்பூசணின்னா இப்படித் தான் இருக்கனும்… பெஸ்ட்டா வாங்க இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமையான இன்று நடைபெற்ற பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு 3000க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தது. குறிப்பாக, விவசாயிகள் பயனற்ற நிலையில் இருந்த மாடுகளை அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டியதாகவும், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளி மாநில வியாபாரிகள் பெரும்பாலான மாடுகளை வாங்கிச் செல்வதால் சுமார் 5 கோடி வரை வர்த்தகம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
March 25, 2025 8:02 PM IST

