
இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10.33 கோடி இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தகவலை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் மக்களவையில் தெரிவித்தார்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டமானது ஏழை குடும்பங்களைச் சேர்ந்த அடல்ட் பெண்களுக்கு டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்புகளை வழங்க தொடங்கப்பட்டது. பாரம்பரிய சமையல் எரிபொருளின் பயன்பாடு கிராமப்புற பெண்களின் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும். PMUJஇன் நோக்கமானது ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களுக்கு டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்புகளை வழங்குவதாகும்.
முன்பெல்லாம் பல வீடுகளில் விறகு, நிலக்கரி, மாட்டுச் சாணம் ஆகியவற்றை எரித்து உணவு சமைத்து வந்தனர். இந்த பாரம்பரிய உணவு முறையானது பெண்களின் உடல் நலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவித்தது. எனவே, இந்த திட்டமானது சமையலை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் ஆக்கியது.
2019ஆம் ஆண்டு செப்டம்பரில் முடிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் 8 கோடி எல்பிஜி இணைப்புகளை வழங்க அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் அதிகமான ஏழைக் குடும்பங்களுக்குப் பலன்களை வழங்க, உஜ்வாலா 2.0 ஆனது ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும் 1 கோடி இணைப்புகளை வழங்குவதே அதன் இலக்காக இருந்தது.
இதையும் படிக்க: மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதாகி வருவதால் 14 கோடி ஏழை மக்கள் பாதிப்பு – சோனியா காந்தி
இந்த இலக்கானது ஜனவரி 2022ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. இதற்குப் பிறகு, மேலும் 60 லட்சம் எல்பிஜி இணைப்புகளை வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. இந்த இலக்கும் டிசம்பர் 2022ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டது. பின்னர், 2023 – 2024 முதல் 2025 – 2026 வரையிலான காலக்கட்டத்தில் மேலும் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அதுவும் ஜூலை 2024க்குள் முடிக்கப்பட்டது.
இந்த அனைத்து முயற்சிகளின் காரணமாக, இந்தியாவில் எல்பிஜி இணைப்புகளானது ஏப்ரல் 2016ஆம் ஆண்டில் 62 சதவீதமாக இருந்தது. தற்போது கிட்டத்தட்ட 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து தற்போது, PMUJஇன் கீழ் புதிய எல்பிஜி இணைப்புகளை வழங்குவதற்கு, இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இதையும் படிக்க: Arvind Kejriwal | பஞ்சாப் முதல்வராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்? – அரசியலில் திடீர் பரபரப்பு.. பின்னணி என்ன?
ஏழைக் குடும்பங்களுக்கு எல்பிஜியை மலிவு விலையில் வழங்குவதற்காக, மே 2022ஆம் ஆண்டில் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஆண்டுக்கு 12 ரீஃபில்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது. இதனையடுத்து 2023ஆம் ஆண்டு அக்டோபரில் சிலிண்டருக்கு ரூ.300ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, டெல்லியில் ரூ.503க்கு எல்பிஜி சிலிண்டர் கிடைக்கிறது.
February 11, 2025 1:15 PM IST

