• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

PMAY-U மூலம் குடிசைவாசிகளுக்கு 90 லட்சம் வீடுகள்…! நாடாளுமன்றத்தில் இணையமைச்சர் டோகன் சாஹு தகவல்…

GenevaTimes by GenevaTimes
March 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
PMAY-U மூலம் குடிசைவாசிகளுக்கு 90 லட்சம் வீடுகள்…! நாடாளுமன்றத்தில் இணையமைச்சர் டோகன் சாஹு தகவல்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 21, 2025 7:12 PM IST

PMAY-U திட்டத்தின் கீழ் மத்திய அரசு உதவி வழங்குவதன் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஆதரிப்பதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MoHUA) பங்கை இணையமைச்சர் சாஹு கோடிட்டுக் காட்டியுள்ளார்.

News18News18
News18

நாடு முழுவதும் 1.39 கோடி குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 6.54 கோடி மக்கள் குடிசைப் பகுதிகளில் வசித்து வருவதாகவும், மார்ச் 3, 2025 வரை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புற (PMAY-U) திட்டத்தின் கீழ் நாட்டின் நகரங்களில் உள்ள குடிசைவாசிகளுக்கு 90.60 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இது தொடர்பான ஒரு கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையமைச்சர் டோகன் சாஹு, குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, அதாவது குடிசைப் பகுதி வீடுகளின் புள்ளிவிவரங்கள் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கடைசி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே PMAY-U திட்டத்தின் கீழ் மொத்தம் 118.64 லட்சம் வீடுகளுக்கு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகவும், மார்ச் 3, 2025 நிலவரப்படி இதில் 112.46 லட்சம் வீடுகளின் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 90.60 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன அல்லது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிதியுதவி முறை மற்றும் செயல்படுத்தும் முறையை மாற்றாமல், அனுமதிக்கப்பட்ட வீடுகளைக் கட்டி முடிக்க 2025 டிசம்பர் 31 வரை திட்டத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

PMAY-U திட்டத்தின் கீழ் மத்திய அரசு உதவி வழங்குவதன் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஆதரிப்பதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MoHUA) பங்கை இணையமைச்சர் சாஹு கோடிட்டுக் காட்டியுள்ளார். நாடு முழுவதும் உள்ள குடிசைப் பகுதிகள் உட்பட நகர்ப்புறங்களில் நான்கு பிரிவுகள் மூலம் (BLC, AHP, ISSR, CLSS) நல்ல உறுதியான வீடுகளை வழங்க, ஜூன் 25, 2015 முதல் PMAY-U திட்டத்தின் கீழ் உதவி வழங்குவதன் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) துணைபுரிகிறது என்று இணையமைச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: இந்தியாவில் ஸ்டீல் விலை உயருமா…? ஸ்டீல் பொருட்களுக்கு 12% தற்காலிக வரி விதிக்க மத்திய அரசு திட்டம்…!

திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். பொதுவாக திட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளிலும், அந்தந்த திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கைகளின்படி (DPRs) 12-36 மாதங்கள் ஆகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சாஹு PMAY-U-ஐ செயல்படுத்திய 9 ஆண்டுகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களின் அடிப்படையில், அமைச்சகம் இந்தத் திட்டத்தை மறுசீரமைத்து, செப்டம்பர் 1, 2024 முதல் ஒரு கோடி கூடுதல் தகுதியுள்ள பயனாளிகளுக்காக PMAY-U 2.0 ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார். இதுவரை 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஒப்பந்தப் பத்திரத்தில் (MoA) கையெழுத்திட்டுள்ளதாகவும், 6.77 லட்சம் வீடுகளுக்கான கொள்கை ரீதியான ஒப்புதல் அந்தந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

First Published :

March 21, 2025 7:12 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || தீயில் எரிந்து பெண் உயிரிழப்பு

Next Post

Water Crisis: 79 ஆறுகள் வறண்டன.. பெரும் நீர் நெருக்கடி ஏற்படும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Next Post
Water Crisis: 79 ஆறுகள் வறண்டன.. பெரும் நீர் நெருக்கடி ஏற்படும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Water Crisis: 79 ஆறுகள் வறண்டன.. பெரும் நீர் நெருக்கடி ஏற்படும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin