பிரதம மந்திரி இலவச வைஃபை சேவையை பொது இடங்களில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய அரசாங்கத்தால் துவங்கப்பட்ட பிரதம மந்திரி வைஃபை ஆக்சஸ் நெட்வொர்க் இன்டர்ஃபேஸ் (Prime Minister Wi-Fi Access Network Interface – PM-WANI) திட்டமானது இந்தியா முழுவதும் உள்ள பொது இடங்களில் வைஃபை வசதிகளை இலவசமாக வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பயணத்தின்போது கூட இன்டர்நெட் சேவை கிடைப்பதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இதன் மூலம் டிஜிட்டல் இந்தியா திட்டமும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
PM-WANI திட்டமானது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு இன்டர்நெட் சேவை கிடைப்பதை உறுதி செய்து இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறது.
PM-WANI திட்டத்தின் பலன்கள்:
அதிவேக இன்டர்நெட்:
PM-WANI திட்டம் ஹை ஸ்பீடு இன்டர்நெட் வழங்குவதன் மூலம் வெப் பிரவுசிங், வீடியோ ஸ்டிரீமிங் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்றவற்றை எந்த ஒரு தடையும் இல்லாமல் அனுபவிக்கலாம்.
இலவச இன்டர்நெட்:
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ஸ்டேஷன்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் இலவச வைஃபையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாதுகாப்பு:
PM-WANI திட்டம் உங்களுக்கு பாதுகாப்பான வைஃபை நெட்வொர்க்கை வழங்குகிறது. இதனால் உங்களுடைய டேட்டா ஹேக் செய்யப்படுமோ என்பதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
சௌகரியம்:
PM-WANI திட்டத்தை பயன்படுத்துவது மிகவும் எளிது. உங்களுடைய ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்பில் “PM-WANI” வைஃபை நெட்வொர்க்கை தேர்வுசெய்து பின்னர் ஒன் டைம் பாஸ்வேர்டை என்டர் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: இந்து – முஸ்லிம், மட்டன் – சிக்கன் என பேசுவதை மோடி நிறுத்த வேண்டும் – மல்லிகார்ஜூன கார்கே
PM-WANI திட்டத்தின் கீழ் இலவச வைஃபை நெட்வொர்க்கை எப்படி பயன்படுத்துவது?
1: உங்களுடைய ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்பில் உள்ள வைஃபை செட்டிங்சை திறக்கவும்.
2: “PM-WANI” என்ற வைஃபை நெட்வொர்க்கை தேர்வு செய்யுங்கள்.
3: இப்பொழுது நீங்கள் பெற்ற ஒன் டைம் பாஸ்வேர்டை என்டர் செய்யவும்.
4: உங்களுடைய சம்மதத்தை நீங்கள் வழங்கியதும் இலவச வைஃபையை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
PM-WANI திட்டம் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால் நீங்கள் PM-WANI திட்டத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான https://pmwani.gov.in/ என்பதை பார்வையிடவும். மேலும் PM-WANI திட்டம் குறித்த தகவல்களை போனில் தெரிந்துகொள்ள 1800-266-6666 என்ற எண்ணை அழைக்கலாம்.
இந்தியாவில் டிஜிட்டல் திட்டத்தை ஊக்குவிப்பதில் PM-WANI திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பொதுமக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற சமூகம் சார்ந்த பொருளாதார வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு உதவுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)