பிரதமர் மோடி அமைச்சரவையில் 30 கேபினட் அமைச்சர்கள் உள்பட 72 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து, இன்று பிரதமர் பதவியேற்பு விழா அறிவிக்கப்பட்ட நிலையில், நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக இன்று இரவு 7.15 மணிக்கு பதவியேற்றார். இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் உளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.
மோடி அமைச்சரவையில் நரேந்திர மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள் 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் தென் இந்தியாவைச்சேர்ந்த அமைச்சர்களின் விவரம் பின்வருமாறு:-
நிர்மலா சீதாராமன்
– கர்நாடகா (பாஜக)
எச்.டி.குமாரசாமி
– கர்நாடகா (மதச்சார்பற்ற ஜனதாதளம்)
ராம் மோகன் நாயுடு – ஆந்திரா பிரதேசம் ( தெலுங்கு தேசம் கட்சி)
கிஷன் ரெட்டி – தெலங்கானா( பாஜக)
சந்திர சேகர் பெம்மாசானி – ஆந்திரா பிரதேசம் ( தெலுங்கு தேசம் )
சுரேஷ் கோபி – கேரளா (பாஜக)
எல்.முருகன் – தமிழ்நாடு (பாஜக) ம.பி ராஜயசபா
பண்டி சஞ்சய் – தெலுங்கானா (பாஜக)
ஸ்ரீனிவாச வர்மா – ஆந்திரா (பாஜக)
ஜார்ஜ் குரியன் – கேரளா (பாஜக)
.
&w=750&resize=750,375&ssl=1)
