• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

PM Modi 25 Years | ‘குஜராத் மாடல்..’ முதலமைச்சராக நரேந்திர மோடி 13 ஆண்டுகாலம் சாதித்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
PM Modi 25 Years | ‘குஜராத் மாடல்..’ முதலமைச்சராக நரேந்திர மோடி 13 ஆண்டுகாலம் சாதித்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குஜராத்தில் மோடியின் ஆட்சிகால தொடக்கம் அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை. காரணம், அவர் 2001ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது குஜராத் கடுமையான பூகம்பப் பேரழிவைச் சந்தித்திருந்தது. இதிலிருந்து மீண்டு வருவது எப்படி? என ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கையை இழந்திருந்த காலத்தில், அவர் மறுசீரமைப்பு செய்து, உள்கட்டமைப்புகளை மேம்படுத்திய விதம் அனைவருக்கும் நம்பிக்கை ஒளியை பாய்ச்சியது.

அடுத்த ஆண்டே கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்தால் ராஜினாமா செய்த மோடி அரசு, அதே ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வென்று திட்டங்களைத் தொடர்ந்தது. குறிப்பாக, இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, குஜராத்தில் பிரத்யேக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை மோடி கொண்டு வந்தார். 2002ஆம் ஆண்டு, ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் முன்னோடி திட்டமாக, கிராமங்களில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய நீர் மற்றும் சுகாதார மேலாண்மை நிறுவனம் என்ற அமைப்பை நிறுவினார்.

இதையும் படிங்க: PM Modi 25 Years | பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு.. பிரதமர் மோடி இதுவரை சாதித்தது என்ன?

உலகளாவிய முதலீடுகளை ஈர்க்க 2003-இல் முதன்முறையாக வைப்ரண்ட் குஜராத் (Vibrant Gujarat) மாநாட்டை நடத்தினார். இது குஜராத்தின் பொருளாதார முகவரியாகவே மாறியது. அதே ஆண்டில் மக்கள் தங்கள் குறைகளை ஆன்லைன் வழியாக நேரடியாக முதலமைச்சரிடம் தெரிவிக்கும் ‘சுவாகத்’ மின் ஆளுமை என்ற முன்னோடி திட்டத்தை கொண்டு வந்தார். பெண் கல்வியை ஊக்குவிக்க ’கன்யா கேளவணி’ மற்றும் ’சாலா பிரவேசோ உத்சவ்’ போன்ற விழிப்புணர்வு பரப்புரைகளை தொடங்கிய நரேந்திர மோடி, கல்வி தரத்தை உயர்த்தினார்.

2005இல் குஜராத் பசுமைப் புரட்சி நிறுவனத்தை நிறுவி, சொட்டு நீர் பாசனம் மூலம் வறண்ட பகுதிகளையும் விவசாய நிலங்களாக மாற்றிக் காட்டினார். அதே காலக்கட்டத்தில் மக்கள் பங்களிப்புடன் ஏராளமான தடுப்பணைகள் கட்டி விவசாய புரட்சிக்கு வித்திட்டார். கிராமங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் ‘ஜோதிகிராம் யோஜனா’, மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க ‘சிரஞ்சீவி யோஜனா’ என சாதனைகள் விரிந்தன.

இதன்பொருட்டு, 2007 தேர்தலில் வென்று மீண்டும் அரியணை ஏறிய நரேந்திர மோடி, பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாடு திட்டம், தாய்-சேய் நலன் காக்க e-Mamta சுகாதாரத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தினார். குறிப்பாக, மோடியின் இந்தக் காலக்கட்டத்தில்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்காகவும் ஆசியாவிலேயே முதன்முறையாகத் தனி ஒரு காலநிலை மாற்றத் துறை உருவாக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காக்களில் ஒன்றான ’சரண்கா சோலார் பார்க்’ என்ற திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் குஜராத்தை முதலிடத்திற்குக் கொண்டு சென்றார். அதேபோல, காந்திநகரில் சர்வதேசத் தரத்திலான உலகளாவிய GIFT City-ஐ உருவாக்கி குஜராத்தை Global Financial Map-இல் இணைத்தார்.

நர்மதா நதிநீர் கால்வாய்களின் மேல் சூரிய மின்சாரத்திற்காக சோலார் பேனல்களை அமைத்து, ஒட்டுமொத்த நாட்டையும் குஜராத்தை திரும்பி பார்க்கவைத்தவரும் மோடிதான். இவற்றின் பிரதிபலனாக நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய மோடி, அகமதாபாத்தில் வறண்டு கிடந்த சபர்மதி ஆற்றைச் சீரமைத்து, இந்தியாவின் மிக அழகான மற்றும் நவீன ஆற்றங்கரைப் பூங்காவாக (Riverfront) மாற்றியமைத்தார். 2018ஆம் ஆண்டு பிரதமரானபிறகு திறந்துவைத்த ‘Statue of Unity’ என்ற சர்தார் வல்லபாய் படேலுக்கான உலகின் மிக உயரமான சிலையைக் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இத்தனை சாதனைகளும் குஜராத் மாநிலத்தை நாட்டின் மிக முக்கியத் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மாநிலமாக மாற்ற உதவின. இந்த ‘குஜராத் மாடல்’ காரணமாக நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவராக உருபெற்ற நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக கட்சி முன்னிறுத்தியது. 2014ஆண்டு ஆண்டு முதல் நாட்டின் பிரதமர் என்ற அரியணையை அலங்கரித்து வருகிறார்.

Read More

Previous Post

சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது – அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்

Next Post

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

Next Post
Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Today | தங்கம் விலை உயர்ந்ததா - குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin