Last Updated:
மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதில், “காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் இணைந்து மகளிர் மசோதாவை தடுத்துவிட்டன. மசோதாவை நிறைவேற்ற முடியாததால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மகளிர் மசோதாவை தடுத்ததால் மிகுந்த வேதனைக்கு உள்ளானேன்.
மசோதாவை நிறைவேற்ற முடியாததால் மகளிரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் மறக்க மாட்டார்கள். மசோதா தோல்வியடைந்த பிறகு எதிர்க்கட்சிகள் கொண்டாடியது மிகுந்த வேதனை அளித்தது. பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் மறக்க மாட்டார்கள். எதிர்கட்சிகள் பாவம் செய்துவிட்டன. அதற்கான தண்டனை கிடைக்கும். மசோதாவை தோல்வியடைய செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பெண்கள் மறக்கமாட்டார்கள். தெற்கு, வடக்கு என அனைத்து பகுதிகளும் இந்தியாவுக்கு தேவை.” என்று பேசினார்.
முன்னதாக மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. தென்மாநிலங்களின் இடங்கள் குறையாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்திருந்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தன. இதனால் 2/3 பெரும்பான்மை கிடைக்காமல் மசோதா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Delhi,Delhi,Delhi
PM Modi | “மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..” பிரதமர் மோடி


