Last Updated:
இந்தியாவில் அதிக நாட்கள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை வரும் ஜூன் 10-ம் தேதி முறியடிக்கிறார் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. இது வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிக நாட்கள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை வரும் ஜூன் 10-ம் தேதி முறியடிக்கிறார் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. இது வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி 12 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார். 3வது முறை தற்போது பிரதமராக இருக்கிறார். காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு பிரதமராக பதவி ஏற்ற நேரு, இந்தியாவை நவீனத்துவமாக மாற்ற முயன்றார்.
பிரதமர் நரேந்திர மோடியை பொறுத்தவரை, கலாச்சாரம், வரலாற்று அடையாளம், நாகரீக சின்னங்களை பாதுகாத்தல் போன்றவற்றால் நாட்டின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்துள்ளார் என்றே சொல்லலாம். அதாவது இந்தியாவை ‘Civilisational’ தேசியமாக நிலை நிறுத்தி வருகிறார். தொடர்ந்து நாட்டின் பண்பாட்டு – கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.
ஜவஹர்லால் நேரு, அறிவியல் மனப்பான்மையால் வரையறுக்கப்படும் ஒரு நவீன தேச-அரசை கட்டமைக்க வேண்டும் என கனவு கண்டார். மதச்சார்பற்ற தன்மை, தொழில்துறை முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார் நேரு. சுதந்திரத்துக்கு பிறகான இந்தியாவுக்கு தொன்மையான வரலாற்றிலிருந்து விடுப்பட்டு முற்போக்கு அடையாளம் தேவை என நினைத்தார். மாபெரும் அணைகள், எஃகு ஆலைகள், ஆராய்ச்சி நிறுவனங்களே நேருவை பொறுத்தவரை நவீன இந்தியாவின் கோயில்கள்.
இதற்கு முற்றிலும் மாறுபட்டு செயல்பட்டார் தற்போதைய பிரதமர். நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவின் தொன்மை, பாரம்பரிய அடையாளத்தை மீட்டெடுப்பது. தேசிய பெருமையை முன்னிறுத்துவது ஆகியவை முதன்மையான விஷயங்களாக செயல்படுத்தப்பட்டது. கலாச்சார மீட்டெப்பை தேசிய முன்னேற்றத்தின் இன்றியமையாத அங்கமாக கருதுகிறது தற்போதைய அரசு.
வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் வளாகங்களின் பிரம்மாண்டமான சீரமைப்பு, தொன்மையான கலாச்சார வழித்தடங்களை மீட்டெடுத்தல் மற்றும் இந்தியாவை ஒரு நாகரிகம் சார்ந்த நாடாகவும் ‘விஸ்வகுரு’வாகவும் (உலகிற்கே வழிகாட்டியாகவும்) உலக அரங்கில் முன்னிறுத்துதல் உள்ளிட்ட அரசின் முக்கிய முன்னெடுப்புகளில் மாற்றம் வெளிப்பட்டுள்ளது.
வரலாற்று அடையாளத்தை அன்றாட நிர்வாக நடைமுறைகளுடன் இணைப்பதன் மூலம், ஒரு நாடு தனது கலாச்சார வேர்களை ஆழமாக விதைப்பதன் மூலம், காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியும் என்பதை பிரதமர் மோடி அரசு உணர்ந்து செயல்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.


