Last Updated:
இந்த பயணித்தின் போது இருதரப்புப் பேச்சுவார்த்தைகள், புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி.
6 நாள் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா குடியரசுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது இருதரப்புப் பேச்சுவார்த்தைகள், புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதல் நிகழ்வாக பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகருக்கு சென்றுள்ள பிரதமர், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்துள்ளார். தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை ஒன்றிணைக்க பாரத் இன்னோவேட்ஸ் திட்டத்தை அவர்கள் இணைந்து தொடங்கி வைக்கின்றனர்.
Thank you President Vučić for your warm and heartfelt wishes.
I fondly recall your recent visit to India and our productive discussions. India deeply values its friendship with Serbia and I look forward to working together to further strengthen our partnership in the years… https://t.co/dVZnPPrFc6— Narendra Modi (@narendramodi) June 14, 2026
இன்று மற்றும் நாளை (ஜூன் 14 மற்றும் 15ஆம் தேதி) ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமர் செல்கிறார். அந்நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற புது வரலாறை படைக்க உள்ளார் பிரதமர். மேலும் அந்நாட்டு அதிபர் பெல்லேகிரினியை சந்திக்கும் பிரதமர் மோடி, இரு நாட்டு உறவு குறித்து ஆலோசிக்க உள்ளார்.
இதையடுத்து 16 மற்றும் 17ஆம் தேதி பிரான்ஸின் எவியான் நகரத்தில் நடக்கும் ஜி 7 மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். பின்னர் 18ஆம் தேதி பாரிஸ் நகரத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு விவா-டெக் 2026 நிகழ்வில் பங்கேற்கிறார். மேலும் அங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களை அவர் சந்திக்க உள்ளார். பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்புகிறார்.


