பி.எம். கிசான் திட்டம் நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் அரசாங்கம் ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கி வருகிறது. இந்தப் பணம் தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதன்மூலம், சுமார் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். இந்த நிலையில், விவசாயிகள் தற்போது 23வது தவணைக்காக காத்திருக்கின்றனர்.


