நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது தகுதியான விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குகிறது.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில், குறைந்தபட்ச ஆதரவு வருமானமாக தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 தொகையை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 2018ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் யோஜனாவின் நன்மைகள்:
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்ய நிதி உதவியை வழங்குகிறது. விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது. விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஒட்டுமொத்த வருமானத்தை மேம்படுத்துகிறது.
PM கிசான் சாட்போட் (கிசான்-இ மித்ரா)
கிசான்-இ மித்ரா என்பது 2023ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட AI சாட்போட் ஆகும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு உடனடி பதில்களைப் பெற விவசாயிகள் PM கிசான் AI சாட்போட் (கிசான் இ-மித்ரா)ஐ பயன்படுத்தலாம்.
எலிஜிபிலிட்டி, அப்ளிகேஷன் ப்ராசஸ், பேமென்ட் ஸ்டேட்டஸ் மற்றும் கம்பிளைன்ட் ரெசலூஷன் உள்ளிட்ட PM கிசான் திட்டத்தைப் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குகிறது. மேலும், இந்த திட்டமானது விவசாயிகளுக்கு விரைவான மற்றும் துல்லியமான தகவல்களையும் வழங்குகிறது.
இதையும் படிக்க:
தனியாரிடம் ஒப்படைக்கப்படும் பொதுத்துறை வங்கி – இதுதான் காரணமா?
கிசான் இ-மித்ரா ஆனது தொழில்நுட்ப தலையீடு மூலம் விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பதன் நன்மைகள் என்ன? PM கிசான் பதிவுக்கு e-KYC கட்டாயமா?, PM கிசான் மொபைல் ஆப் மூலம் நான் எப்படி சுயமாக பதிவு செய்வது? மற்றும் PM கிசான் பதிவுக்கு ஏதேனும் கட்டணம் உள்ளதா? போன்ற கேள்விகளுக்கு கிசான் இ-மித்ரா பதிலளிக்கிறது.
PM கிசான் AI சாட்போட் ஆனது இந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, தமிழ், ஒடியா, மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் உட்பட 11 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான மொழியில் தகவல்களைப் பெறவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியும்.
இதையும் படிக்க:
சேமிப்பு கணக்குகளை வைத்து இவ்வளவு விஷயங்களை செய்ய முடியுமா? விவரம் இதோ
PM கிசான் AI சாட்போட் டவுன்லோட் செய்வது எப்படி?
1: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து PM கிசான் AI சாட்போட் மொபைல் அப்ளிகேஷனான கிசான் இ-மித்ரா-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
2: பிறகு அதனை இன்ஸ்டால் செய்து, ஆப்பில் உள்ள AI சாட்போட்டைக் கிளிக் செய்யவும்
3: கேள்வியைத் தேர்ந்தெடுக்கவும்
4: தொடர்புடைய பதில்களைப் பெற்று பலன் பெறுங்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)