• Login
Tuesday, June 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PM கிசான்: ரூ.2,000 இன்னும் வரவில்லையா? இதை ஒரு முறை செக் பண்ணிட்டு.. ஹெல்ப்லைன் நம்பருக்கு கால் பண்ணுங்க! | PM Kisan 23rd Installment Credited: What to Do If Rs.2,000 Hasn’t Reached Your Account

GenevaTimes by GenevaTimes
June 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
PM கிசான்: ரூ.2,000 இன்னும் வரவில்லையா? இதை ஒரு முறை செக் பண்ணிட்டு.. ஹெல்ப்லைன் நம்பருக்கு கால் பண்ணுங்க! | PM Kisan 23rd Installment Credited: What to Do If Rs.2,000 Hasn’t Reached Your Account
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


PM கிசான்: ரூ.2,000 இன்னும் வரவில்லையா? இதை ஒரு முறை செக் பண்ணிட்டு.. ஹெல்ப்லைன் நம்பருக்கு கால் பண்ணுங்க!

உழவுக்கு உதவும் வகையில் விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்). இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தகுதியுள்ள விவசாயிக்கும் வருடத்திற்கு ரூ.6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்ததில் இருந்து இதுவரையில் 23 தவணைகள் வரை வழங்கப்பட்டுள்ளது. ரூ.6,000 தொகை ஒரே தவணையாக வழங்கப்படுவதில்லை. 1 வருடத்திற்கு மூன்று தவணைகளாக பிரித்து வழங்கப்படுகிறது. ஜூன் 20-ஆம் தேதி அன்று கோடிக்கணக்கான விவசாயிகளின் அக்கவுண்டுக்கு 2000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு சிலருக்கு பணம் ஏறவில்லை.உங்களுக்கும் பணம் வரவில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

23வது தவணை ஜூன் 20 அன்று மேற்கு வங்காள மாநிலத்தின் தாரகேஸ்வரில் இருந்து பிரதமர் மோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தார். இந்த முறை 9.44 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.18,880 கோடிக்கும் அதிகமான நிதி உதவி வழங்கப்பட்டது. ஒரு சிலருக்கு இன்னும் தவணை தொகை கிடைக்கவில்லை. இதை நினைத்து பயப்பட வேண்டாம்.

நீங்கள் பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்து தகுதியுள்ள விவசாயியாக இருந்தும் ரூ.2000 தவணை இன்னும் வரவில்லை என்றால் நீங்கள் ஒரு சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

தவறான வங்கி கணக்கு விவரங்கள்: ஒரு சிலர் பதற்றத்தில் தவறான வங்கி கணக்கு விவரங்களை வழங்கியிருப்பார்கள் அல்லது வங்கி கணக்கு செயலற்ற நிலையில் இருக்கும். இது போன்ற காரணங்களாலும் ரூ.2000 பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே ஒரு முறை பிஎம் கிசான் இணையதளத்திற்கு சென்று நீங்கள் சரியான வங்கி கணக்கு விபரங்களை தான் வழங்கி இருக்கிறீர்களா?, அனைத்து விவரங்களும் துல்லியமாக இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

PM கிசான்: ரூ.2,000 இன்னும் வரவில்லையா? இதை ஒரு முறை செக் பண்ணிட்டு.. ஹெல்ப்லைன் நம்பருக்கு கால் பண்ணுங்க!

அதேபோல மற்றொரு முக்கியமான விஷயத்தையும் விவசாயிகள் செய்ய வேண்டும். அது இ-கேஒய்சி சரிபார்ப்பு. நோ யுவர் கஸ்டமர் என்று சொல்லப்படுகிற இந்த செயல்முறையை செய்யவில்லை என்றாலும் தவணை தொகை வராது. விவசாயிகள் ஓடிபி அடிப்படையிலான ஈகேஒய்சி செயல்முறை, பயோமெட்ரிக் அடிப்படையிலான ஈகேஒய்சி செயல்முறை போன்றவற்றை செய்யலாம்.

வங்கி கணக்கு விபரங்களிலும், ஆதார் விபரங்களிலும் வேறுபாடு இருந்தால் பணம் வருவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே உங்களுடைய பெயர், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்கள் ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு ஆகிய இரண்டிலும் ஒன்றாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் ஏதேனும் ஒன்றில் சரியான விவரங்களை மாற்றி அமையுங்கள்.

பயனாளிகளின் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்: பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்த உடனே உங்களுக்கு பணம் வந்துவிடாது. நீங்கள் தகுதியுள்ள விவசாயி தானா என்பதை பொறுத்தே பெனிபிஷேரி லிஸ்ட் வெளியிடப்படும். அதில் உங்களுடைய பெயர் இருந்தால் கட்டாயம் ரூ.2000 தவணைத் தொகை வங்கிக் கணக்கிற்கு கணக்கச்சிதமாக வந்துவிடும்.

எனவே நீங்கள் விண்ணப்பித்தும் பணம் வராமல் இருந்தால் இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஆவணங்களில் உள்ள பிழைகள் காரணமாகவும் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம். இணையதளத்தில் நோ யுவர் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி விவசாயிகள் இதை தெரிந்து கொள்ளலாம். அதில் தவணை தொகை வரவு வைக்கப்பட்டுவிட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நிலுவையில் இருக்கிறதா என்ற தகவல்கள் கிடைக்கும்.

பிஎம் கிசான் திட்டத்தின் 23-வது தவணை கிடைக்கவில்லை என்றால் எங்கு புகார் அளிப்பது?: எல்லா விவரங்களையும் சரியாக வழங்கியிருக்கிறீர்கள்.. அப்படி இருந்தும் இன்னும் பணம் கிடைக்கவில்லை என்றால் விவசாயிகள் இந்த திட்டத்தின் உதவி எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது இமெயில் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்.

பிஎம் கிசான் உதவி எண்: 155261
கட்டணமில்லா எண்: 1800-115-526
பிற உதவி எண்: 011-23381092
மின்னஞ்சல்: [email protected]

பொறுமையாக இருங்கள்: மற்றொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அரசு கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கி கணக்கெற்கும் ஒரே நேரத்தில் நிதியை வரவு வைக்கிறது. இதனால் அனைத்து கணக்குகளிலும் பணம் வந்து சேர சில மணி நேரங்களோ அல்லது ஓரிரு நாட்களோ ஆகலாம். விடுவிக்கப்பட்ட பிறகு விவசாயிகள் சற்று பொறுமையாக காத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share This Article

Story first published: Monday, June 22, 2026, 10:11 [IST]

Other articles published on Jun 22, 2026

Read More

Previous Post

அமெரிக்காவை துளியும் மதிக்காத பெஞ்சமின் நெதன்யாகு.. ஒரு இன்ச் கூட நகரமுடியாது.. மீண்டும் போர் வருமா? | Netanyahu Defies US-Iran Deal: Israel Will Stay in Southern Lebanon Buffer Zone Indefinitely

Next Post

ஜோகூர் தேர்தல் களம்: 56 தொகுதிகளிலும் பக்காத்தான் ஹரப்பான் போட்டி! மஸ்லி மாலிக் உள்ளிட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! | Makkal Osai

Next Post
ஜோகூர் தேர்தல் களம்: 56 தொகுதிகளிலும் பக்காத்தான் ஹரப்பான் போட்டி! மஸ்லி மாலிக் உள்ளிட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! | Makkal Osai

ஜோகூர் தேர்தல் களம்: 56 தொகுதிகளிலும் பக்காத்தான் ஹரப்பான் போட்டி! மஸ்லி மாலிக் உள்ளிட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin