Last Updated:
UMANG ஆப் மூலம் PF பணத்தை எடுக்க, ஆதார் மற்றும் UAN இணைப்பு அவசியம். UMANG ஆப் மூலம் EPFO சேவைகளை பயன்படுத்தி, வீட்டிலிருந்தே PF பணத்தை எடுக்கலாம்.
UMANG ஆப் மூலம், உங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
UMANG ஆப் மூலம் உங்கள் PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது எப்படி?. EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு PF திரும்பப் பெறும் செயல்முறையை அரசாங்கம் மிகவும் எளிதாக்கியுள்ளது. UMANG ஆப் மூலம், ஊழியர்கள் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் PF தொகையை எடுக்க முடியும். இந்த செயலி மூலம், பணியாளர்கள் வீட்டில் அமர்ந்தபடியே PF கணக்கை சரிபார்த்து, அதை மாற்றலாம் மற்றும் உங்கள் வீட்டில் இருந்தபடியே பணத்தை திரும்பப் பெறலாம்.
UMANG (புதிய கால நிர்வாகத்திற்கான ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் பயன்பாடு) ஆப் என்பது மினிஸ்ட்ரி ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (MeitY) மற்றும் நேஷனல் இ-கவர்னெ ன்ஸ் (NeGD) ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் ஒரு அரசு தளமாகும். இதில் 200க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் 1,200க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது. இதில் EPFO இன் சேவைகளும் அடங்கும்.
UMANG-லிருந்து PF பணத்தை எடுக்க நீங்கள் தகுதியுடையவரா?
- ஆதார் மற்றும் UAN இணைப்பு: யூனிவர்சல் அக்கௌன்ட் நம்பர் (UAN) ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும்.
- உங்கள் கணக்கில் உள்ள ஆதார், பான் மற்றும் வங்கி கணக்கு போன்ற KYC விவரங்களை EPFO போர்ட்டலில் அப்டேட் செய்து சரிபார்க்கப்பட வேண்டும்.
- ஒருவர் வேலையை இழந்தாலோ அல்லது வேலையில்லாமல் இருந்தாலோ, ஓய்வூதியம், மருத்துவ தேவைக்காகவோ, கல்வியைத் தொடர விரும்பினாலோ அல்லது வீடு வாங்க விரும்பினாலோ போன்ற காரணங்களுக்காக மட்டுமே ஒருவரின் PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.
UMANG-லிருந்து PF பணத்தை எடுப்பது எப்படி?
- முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து UMANG ஆப்-ஐ இன்ஸ்டால் செய்யவும்.
- பின்பு, ரெஜிஸ்டர் செய்து லாகின் செய்யவும்.
- பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும். OTP ஐ என்டர் செய்து லாகின் செய்ய வேண்டும்.
- ஹோம் பேஜ்-க்குச் சென்று EPFO பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.
- ‘எம்பிளாய்-சென்ரிக் சர்வீசஸ்’ என்பதைக் கிளிக் செய்து, ‘ரெய்ஸ் க்ளைம்’ என்பதைத் செலக்ட் செய்ய வேண்டும்.
- பின்னர், UAN மற்றும் மொபைல் போனில் பெறப்பட்ட OTP யை என்டர் செய்ய வேண்டும்.
- இதைத் தொடர்ந்து, க்ளைம் பார்ம்-ஐ பூர்த்தி செய்ய வேண்டும், முழு பிஎஃப் தொகையை அல்லது அதில் ஒரு பகுதியை எடுக்க விரும்புகிறீர்களா என்பதைக் குறிப்பிட வேண்டும்.
- தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, பணத்தை திரும்பப் பெறுவதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
- பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். இதற்கு மருத்துவச் சான்றிதழ் அல்லது கல்விச் சான்று தேவைப்படலாம்.
- விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, ஆப் இல் உள்ள ‘ட்ராக் க்ளைம்’ பிரிவிற்குச் சென்று ஸ்டேட்டஸ்-ஐ கண்காணிக்கலாம்.
February 10, 2025 4:16 PM IST


