• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PF பணத்தை வித்ட்ரா செய்த பிறகு EPS அக்கவுண்ட்டை எப்படி யூஸ் பண்ணனும்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

GenevaTimes by GenevaTimes
June 3, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
PF பணத்தை வித்ட்ரா செய்த பிறகு EPS அக்கவுண்ட்டை எப்படி யூஸ் பண்ணனும்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 03, 2025 10:10 PM IST

EPS பணத்தை வித்ட்ரா செய்ய வேண்டும் என்று வரும்போது நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்கள் உள்ளன.

News18News18
News18

தனியார் துறையில் உள்ள மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கான மிகப்பெரிய பணி ஓய்வு பலன்களைப் பெற்றுத் தரக்கூடிய இரண்டு முக்கியமான திட்டங்களில் எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) மற்றும் எம்ப்ளாயீஸ் பென்ஷன் ஸ்கீம் (EPS) ஆகியவை அடங்கும். இந்த இரண்டு திட்டங்களுமே எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அரசு ஆதரவு பெற்று வரும் இந்த ஓய்வுகாலத் திட்டங்கள் தனியார் துறையில் உள்ள மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

இந்தத் திட்டங்கள் மூலமாகத் தங்களுடைய சேவைக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் சிறிய அளவில் பங்களிப்புகளைச் செய்து, பணி ஓய்வு பெறும்போது பெரிய அளவிலான ஒரு தொகையைச் சேகரிக்கலாம். பெரும்பாலான மாத வருமானம் பெறுபவர்களுக்கு EPF பற்றியும் அதில் இருக்கும் தொகையை எப்படி வித்ட்ரா செய்வது என்பது பற்றியும் தெரியும். ஆனால், EPS தொகையைப் பற்றிப் பலர் தெரிந்து கொள்வது கிடையாது. எனினும், ஓய்வுக்குப் பிறகு EPF பணத்தை மொத்தமாக வித்ட்ரா செய்த பிறகும் கூட உங்களால் EPS தொகையைப் பயன்படுத்த முடியும்.

EPF vs EPSக்குச் செய்யும் பங்களிப்புகள்:

தற்போதைய விதிகளின்படி, ஒரு ஊழியர் அவருடைய அடிப்படைச் சம்பளம் மற்றும் டியர்னஸ் அலவன்ஸில் இருந்து 12 சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் EPF அக்கவுண்ட்டுக்குப் பங்களிக்க வேண்டும். இதே அளவு தொகையை அவர் வேலை செய்யும் நிறுவனமும் பங்களிக்கும். EPF வட்டி விகிதத்தை ஒவ்வொரு நிதியாண்டிலும் அரசு நிர்ணயிக்கிறது. 2024-25 நிதியாண்டிற்கு இது 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், நிறுவனத்தின் பாதி அளவு தொகை மட்டுமே EPF அக்கவுண்டில் கிரெடிட் செய்யப்படும். மீதமிருக்கக்கூடிய தொகை EPS அக்கவுண்டில் கிரெடிட் ஆகும்.

சொல்லப் போனால், நிறுவனம் செய்யும் 12 சதவீதப் பங்களிப்பில் 8.33% EPSக்கும், மற்றும் மீதம் இருக்கக்கூடிய 3.67% EPF அக்கவுண்டுக்கும் பங்களிக்கப்படும். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு மாதத்திற்கு ₹15,000க்கும் அதிகமான அடிப்படைச் சம்பளம் மற்றும் DA பெறும் ஊழியர்கள் EPS திட்டத்தில் பங்கு பெறுவதற்குத் தகுதி பெற மாட்டார்கள்.

இந்த விதியை EPFO செப்டம்பர் 2014ஆம் ஆண்டில் அமல்படுத்தியது. செப்டம்பர் 1, 2014ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்து இந்தத் திட்டத்தில் பங்களித்து வரும் மாதச் சம்பளம் பெறும் நபர்கள் தொடர்ந்து EPS பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். PF பணத்தை வித்ட்ரா செய்த பிறகும் கூட சப்ஸ்கிரைபர்கள் EPS தொகையைப் பல்வேறு வழிகளில் கிளைம் செய்யலாம்.

எம்ப்ளாயீஸ் பென்ஷன் ஸ்கீம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

EPS பணத்தை வித்ட்ரா செய்ய வேண்டும் என்று வரும்போது நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்கள் உள்ளன.

  • 10 வருடச் சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்யாத எவராலும் EPS அக்கவுண்டில் இருந்து பணத்தை வித்ட்ரா செய்ய முடியாது.
  • 58 வயது அடைவதற்கு முன்பாகவே சப்ஸ்கிரைபர்களால் பென்ஷன் தொகை பெற முடியும். ஆனால், 50 வயதுக்கு முன்பு பெற முடியாது.
  • முன்கூட்டியே பென்ஷனை வித்ட்ரா செய்ய வேண்டும் என்று வரும்போது, 58 வயதுக்கு உள்ளாக இருக்கும் சப்ஸ்கிரைபர்களுக்கான மாத வித்ட்ரா தொகை என்பது ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதமாகக் குறைக்கப்படும்.
  • EPS அக்கவுன்ட்டை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவது என்பது தொகையை மாற்றுவது கிடையாது. மாறாக, இது பணிச் சேவை வரலாற்றை டிரான்ஸ்ஃபர் செய்வது ஆகும்.
  • பாஸ்புக் வழக்கமாக அனைத்து நிறுவனங்களுக்கான EPS தொகையைக் காண்பிக்கும்.

EPS வித்டிராயல் செய்வதற்கான படிகள்:

  • EPFO மெம்பர் இ-சேவா போர்ட்டலுக்குள் லாகின் செய்யுங்கள்.
  • அதில் ‘ஆன்லைன் சர்வீசஸ்’ மெனுவின் கீழ் உள்ள ‘Pension on Superannuation/Retirement (Form 10D)’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள்.
  • பென்ஷன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்துவிட்டு ‘சேவ் & பிரிவியூ’ ஆப்ஷனைக் கிளிக் செய்யுங்கள்.
  • தேவையான அனைத்து டாக்குமென்ட்களையும் அப்லோட் செய்யவும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் இமெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட OTP-யை என்டர் செய்யுங்கள்.
  • இறுதியாக ‘வேலிடேட் OTP & சப்மிட்’ ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.

First Published :

June 03, 2025 10:08 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

PF பணத்தை வித்ட்ரா செய்த பிறகு EPS அக்கவுண்ட்டை எப்படி யூஸ் பண்ணனும்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

Read More

Previous Post

டெஸ்ட் கிரிக்கெட் பாணியில் ஆடிய விராட் கோலி: ரசிகர்கள் விரக்தி @ IPL Final | Virat Kohli played Test cricket Fans slams rcb star in IPL Final

Next Post

Tamilmirror Online || ஐ.பி.எல்: சம்பியனாகியது றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு

Next Post
Tamilmirror Online || ஐ.பி.எல்: சம்பியனாகியது றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு

Tamilmirror Online || ஐ.பி.எல்: சம்பியனாகியது றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin