Last Updated:
EPFO மெம்பர்கள் சேவைகளுக்கு ஏஜெண்டுகளை அணுக வேண்டாம் என எச்சரிக்கை. EPFO சேவைகள் இலவசம், சைபர் கஃபேக்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. UAN நியமித்தல், KYC அப்டேட் போன்றவை UMANG அப்ளிகேஷனில் இலவசம்.
EPFO சம்பந்தமான சேவைகளுக்கு தெர்ட் பார்ட்டி நிறுவனங்கள் அல்லது ஏஜெண்டுகளை அணுகுவது குறித்து அதன் மெம்பர்களை EPFO எச்சரித்து உள்ளது. இதனால் அவர்களுடைய பொருளாதார தரவுகள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக EPFO கூறுகிறது. இந்த வெளிப்புற நிறுவனங்கள் EPFO மூலமாக அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மற்றும் இதனால் வீண் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், EPFO மெம்பர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளிப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக திங்கட்கிழமை அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் EPFO கூறியுள்ளது.
EPFO அதிகாரப்பூர்வமாக இலவசமாக வழங்கும் சில சேவைகளுக்கு சைபர் கஃபே ஆபரேட்டர்கள்/ ஃபின்டெக் நிறுவனங்கள் அதிக அளவு பணத்தை வசூல் செய்து வருவது தெரியவந்துள்ளது. இந்த சேவைகள் வெளிப்படையானது மற்றும் எந்த ஒரு EPFO மெம்பர்களும் அதனை எளிமையான முறையில் பயன்படுத்தலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல சூழ்நிலைகளில் இந்த ஆபரேட்டர்கள் EPFOன் ஆன்லைன் புகார் அளிப்பு போர்ட்டலை பயன்படுத்தி EPFO மெம்பர்களுக்கான சேவைகளை பூர்த்தி செய்கின்றனர். உண்மையில் EPFO மெம்பர்கள் வீட்டிலிருந்தபடியே இந்த போர்ட்டலை இலவசமாக பயன்படுத்தலாம். ஆகையால் EPFO அதன் மெம்பர்கள், ஊழியர்கள் மற்றும் பென்ஷனர்களை EPFO போர்டல் மற்றும் UMANG அப்ளிகேஷன் மூலமாக கிடைக்கும் அதன் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது.
அனைத்து EPFO சேவைகள் அதாவது கிளைம் தாக்கல் செய்வது, டிரான்ஸ்ஃபர்கள், KYC அப்டேட் மற்றும் புகார் அளிப்பு செயல்முறை ஆகிய அனைத்துமே மெம்பர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. மேலும் இந்த மாதிரியான சேவைகளுக்கு தேர்டு பார்ட்டி ஏஜெண்டுகள் அல்லது சைபர் காஃபேக்களுக்கு எந்த விதமான கட்டணங்களையும் மெம்பர்கள் செலுத்தக்கூடாது என்று கூறியுள்ளது. EPFO சேவைகளை விரைவாகவும், பயனர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்களை எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. UAN நியமித்தல் மற்றும் ஆக்டிவேஷன் ஆகியவை ஃபேஸ் ஆத்தன்டிகேஷன் டெக்னாலஜி (FAT) மூலமாக UAMNG அப்ளிகேஷனில் செய்யப்படுகிறது.
இந்த வசதியை பயன்படுத்துவதன் மூலமாக மெம்பர்கள் பாஸ் புக்கை பார்ப்பது, KYC அப்டேட்டுகள், கிளைம் சமர்ப்பிப்பது போன்ற பல்வேறு EPFO சேவைகளை உடனடியாக பயன்படுத்தலாம். ஆன்லைனில் கிளைம்களை சமர்ப்பிக்கும் செயல்முறையை விரைவாக்குவதற்கு செக் லீஃப் அல்லது அட்டஸ்டட் பேங்க் பாஸ்புக் இமேஜை அப்லோடு செய்வதற்கான தேவையை EPFO நீக்கி உள்ளது. இதன் மூலமாக கிளைம் செட்டில்மெண்ட் விரைவாகவும், அதே நேரத்தில் அது நிராகரிக்கப்படுவதையும் குறைக்கலாம். அதுமட்டுமல்லாமல் UAN உடன் வங்கி கணக்கு விவரங்களை இணைப்பதற்கு நிறுவனத்தின் அங்கீகாரம் இனி தேவை இல்லை என்ற அறிவிப்பையும் ஏப்ரல் 2025ல் EPFO வெளியிட்டது.
June 20, 2025 7:30 AM IST


