வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை ரூ.2 வரை குறைத்தது இதனையடுத்து லட்சதீவுகளி்ல் பெட்ரோல் டீசல் விலை ரூ.15.3 வரை குறைக்கப்பட்டு உள்ளது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்தியஅரசு மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை ரூ.2 வரை குறைத்து அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் விலைகுறைப்பு அமலானது தொடர்ந்து லட்சதீவுகளிலும் பெட்ரோல் டீசல் விலை ரூ15 வரையில் குறைக்கப்பட்டு உள்ளது.
லட்சதீவு கூட்டத்தில் பெரும்பலான தீவு கூட்டங்கள் இருந்த போதிலும் குறிப்பாக ஆந்த்ரோட், கல்பேனி, கவரட்டி, மினிகாய் ஆகியநான்கு தீவுகளில் மட்டுமே பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்படுகிறது கவரட்டி மற்றும் மினிகாய் தீவுகளுக்கு கொச்சியில் உள்ள ஐஓசி டிப்பபோ மூலம் வழங்கப்படுகிறது ஆந்த்ரோட், மற்றும் கல்பேனி தீவுகளுக்கு பீப்பாய் மூலம் வழங்கப்படுகிறது .
தொலைதூர தீவுகளுக்கு எரிபொருள் கொண்டு செல்வதற்கான சிறப்பு உள்கட்டமைப்புடன் தொடர்புடைய செலவுகளை மீட்டெடுக்கும் நோக்கில் ஐஓசி கூடுதல் கட்டணத்தை நீக்கியது.
இதனைதொடர்ந்து கவரெட்டி மற்றும் மினிகாய் தீவுகளில் விலை குறைப்புக்கு முன் பெட்ரோல் லிட்டர் ரூ. 105.94 ஆக இருந்தது விலை குறைப்புக்கு பின் 100.75 ஆக உள்ளது. டீசல்விடலை 110.91 ல் இருந்து100.75 ஆக குறைக்கப்பட்டு உள்ளது அதே போல் ஆந்த்ரோட் மற்றும் கல்பேனி தீவுகளில் விலை குறைப்புக்கு முன் பெட்ரோல் லிட்டர் ரூ. 116.13 ஆக இருந்தது விலை குறைப்புக்கு பின் 100.75 ஆக உள்ளது. டீசல் விலை 111.04 ல் இருந்து 95.71 ஆக குறைக்கப்பட்டு உள்ளது
இது குறித்து மத்தியபெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப்சிங்புரி ஐஓசிக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் வலை தளத்தில் விலை குறைப்பு நடவடிக்கையானது அப்பகுதி மக்களின் வாழக்கை தரம் மற்றும் வணிகம் மேம்படுத்துவதோடு உலகளாவிய சுற்றுலாவின் முக்கிய மையமாக திகழும் தீவுகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் எனபதிவிட்டு உள்ளார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement