7 வருடங்களுக்கு பர்சனல் லோன்: பர்சனல் லோன் வாங்குவதற்கு எந்த ஒரு அடமானமும் வழங்கத் தேவையில்லை. இதன் காரணமாக பர்சனல் லோன்கள் வழக்கமாக அதிக வட்டி விகிதங்களை வசூல் செய்கின்றன. நீளமான கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் என்பது உங்களுக்குக் குறைவான தவணையோடு எளிமையானதாகத் தோன்றினாலும், இதனால் இறுதியில் நீங்கள் செலுத்தும் வட்டித் தொகை அதிகமாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எந்த வங்கி 7 வருடங்களுக்கு பர்சனல் லோனை வழங்குகிறது?
இந்த வங்கியில் 50 லட்சம் ரூபாய் வரையிலான உடனடிக் கடனை எளிமையான பிராசசிங் மற்றும் நிலையான வட்டி விகிதத்தில் பெறலாம். இங்கு 7 வருடங்கள் வரையிலான கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
7 வருடங்கள் வரையிலான கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இந்த இன்ஸ்டன்ட் பர்சனல் லோன் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இங்கு 40 லட்ச ரூபாய் வரையிலான கடனை ஒரு ஆண்டுக்கு 9.99 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வங்கியில் 25 லட்ச ரூபாய் வரை பர்சனல் லோன் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 10.85 சதவீதத்திலிருந்து வட்டி விகிதம் வசூலிக்கப்படும். மேலும், அதிகப்பட்சக் கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் 84 மாதங்கள் அதாவது 7 வருடங்கள்.
7 வருடங்களுக்கான பர்சனல் லோன் பெறுவதற்கு தேவையான டாக்குமெண்ட்கள்:
பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அட்டை
பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, மின்சார ரசீது, டெலிபோன் ரசீது அல்லது சமீபத்திய கேஸ் பில்.
மாத வருமானம் பெறுபவர்கள் கடந்த 6 மாதங்களுக்கான சேலரி ஸ்லிப் அல்லது படிவம் 16 வழங்க வேண்டும். சுயதொழில் செய்பவர்கள் கடந்த 3 மாதங்களுக்கான ITR, லாபம் & இழப்புக் கணக்கு, பேலன்ஸ் ஷீட் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
7 வருடங்களுக்கு நீங்கள் ஒரு பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும்போது, நீங்கள் அதற்கான வட்டி விகிதம், உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொள்ள வேண்டும். 750 மற்றும் அதற்கும் மேற்பட்ட நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்குக் குறைவான வட்டியில் நீண்ட கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படும்.
மேலும், நிலையான வருமானம் பெற்று வரும் நபர்களுக்குக் கடன்களைக் கொடுக்க வங்கிகள் விரும்புவார்கள். நீங்கள் 7 வருடங்கள் என்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தைத் தேர்வு செய்யும்போது, மாதத் தவணைத் தொகை சிறிய அளவில் செலுத்துவதற்கு எளிமையாக இருக்கும்.
June 28, 2025 8:27 PM IST
Personal Loan | 7 வருடங்களுக்கு பர்சனல் லோன் வழங்கும் வங்கிகள்… கடன் பெறுவதற்கான தகுதி வரம்பு, டாக்குமெண்ட்கள் என்னென்ன…?