Last Updated:
Personal Loan | பர்சனல் லோன்கள் குறைந்த வட்டி விகிதங்களில் கிடைக்கும் போது அதற்கான டிமாண்ட் அதிகமாகும்.
ரெப்போ விகிதத்தை குறைத்து, வட்டி விகிதங்களை 5.25 சதவீதமாக மாற்றியுள்ள ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் சமீபத்திய முடிவு பல கடன் பெறுனர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, பர்சனல் லோன் வாங்கலாம் என திட்டமிட்டு வருபவர்களுக்கு இது நிச்சயமாக ஒரு ஹேப்பி நியூஸ்.
கடன் பெறுவதற்கான செலவு படிப்படியாக குறைந்து வரும் சூழ்நிலையில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அதாவது NBFCகள் சற்று குறைவான வட்டி விகிதங்களில் பர்சனல் லோன்களை வழங்குவதற்கு முன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் உடனடியாக அமல்படுத்தப்படாவிட்டாலும் கூட அடுத்த ஒரு சில வாரங்களில் இந்த புதிய வட்டி விகித சூழலுக்கு ஏற்ப அனைத்து செயல்முறைகளையும் கடன் வழங்குனர்கள் மாற்றலாம் என்பதை கடன் பெறுநர்கள் எதிர்பார்க்கலாம்.
Olyv CEO ஆன ரோஹித் கார்க் இதுகுறித்து கூறியதாவது, “ரெப்போ விகிதங்களை 25 பேசிஸ் புள்ளிகள் குறைத்து, வட்டி விகிதங்களை 5.25 சதவீதமாக மாற்றுவதற்கான RBI எடுத்துள்ள இந்த முடிவு ஒரு தெளிவான மற்றும் வளர்ச்சியை நோக்கிய மாற்றமாக இருக்கும் என்று நம்பலாம். டிஜிட்டல் கடன் வழங்குனர்கள் மற்றும் NBFCகளுக்கு இந்த முயற்சி பணப்புழக்கத்தை விரிவாக்கம் செய்யவும், மூலதனத்திற்கான மொத்த செலவை குறைக்கவும், கடன்களை விரைவாக வழங்கும் திறனை மேம்படுத்தவும் உதவும்.
இந்தியாவில் கடன்களுக்கு ஆகக்கூடிய மொத்த செலவில் இது மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பொதுவாக டிஜிட்டல் கடன் வழங்குனர்கள் மற்றும் NBFCகள் கடன் வாங்குவதற்கான செலவை அதிகமாக நம்பி இருக்கின்றனர். ரெப்போ விகிதத்தை குறைப்பது கடன் வழங்குவதற்கான அவர்களுடைய திறனை நேரடியாக மேம்படுத்தும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பர்சனல் லோன்களை அங்கீகரிப்பது இனி எளிமையாக்கப்படும்.

இந்த ரெப்போ விகித குறைப்பு குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மைக்ரோ ஃபைனான்ஸ் லோன்கள் எடுக்க நினைப்பவர்களுக்கு நல்ல ஆதரவு வழங்கும். பல கடன் பெறுநர்கள் தங்களுடைய கடனை திரும்ப செலுத்துவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே வட்டி விகிதம் குறைவாக இருக்கும் போது கடனை திருப்பி செலுத்தும் அவர்களுடைய செயல்முறை சுமுகமானதாக மாறும் என்று நம்பலாம்.
பர்சனல் லோன்கள் குறைந்த வட்டி விகிதங்களில் கிடைக்கும் போது அதற்கான டிமாண்ட் அதிகமாகும். குறிப்பாக உடனடி மற்றும் சௌகரியமான முறையில் கடன் வாங்குவதற்கு NBFCகளை நம்பி இருக்கும் மாத வருமானம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நிவாரணம். குறைவான வட்டி விகிதம் இயற்கையாகவே வாடிக்கையாளர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். எனவே சிறிய அளவிலான மற்றும் குறுகிய கால பர்சனல் லோன்களுக்கான டிமாண்ட் நிச்சயமாக அதிகரிக்கும்.
மேலும் கடன் பெறுநர்கள் குறைவான EMIகள், எளிதாக கடன் பெறுவது மற்றும் தங்களுடைய பொருளாதாரத்தை திட்டமிடுவதில் அதிக தன்னம்பிக்கை மூலமாக பலனடைவார்கள். பர்சனல் லோன் எடுக்கலாம் என்று முடிவு செய்திருப்பவர்கள் சிறந்த சலுகைகள் மற்றும் குறைவான வட்டி விகிதங்களை பெறுவதற்கு அடுத்த ஒரு சில வாரங்களில் அதனை வாங்குவதற்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் அனைத்து கடன் வழங்குனர்களும் வட்டி விகிதங்களை குறைப்பார்கள் என்று சொல்ல முடியாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்.
December 18, 2025 7:24 AM IST


