இந்த லோன்கள் வங்கிகள், கிரெடிட் யூனியன்கள் அல்லது டிஜிட்டல் லெண்டிங் தளங்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. பர்சனல் லோன் பெறுவதற்கு முன்பு, உங்களுடைய விண்ணப்பம் உடனடியாக அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்ய, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன.
உங்களுடைய லோனை அப்ரூவ் செய்வதற்கு முன்பு, உங்களால் அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை கடன் வழங்குநர்கள் ஆய்வு செய்வார்கள். எனவே, இதில் வருமான சரிபார்ப்பு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு நிலையான மற்றும் மாதத்தவணை செலுத்துவதற்குப் போதுமான வருமானம் இருக்கிறதா என்பதை கடன் வழங்குநர்கள் சோதித்துப் பார்ப்பார்கள்.
நீங்கள் மாத வருமானம் பெறுபவராகவோ, ஃப்ரீலான்சர் அல்லது சுயதொழில் செய்பவரோ, யாராக இருந்தாலும் உங்களுடைய கடன் விண்ணப்பத்தை ப்ராசஸ் செய்வதற்கு முன்பு உங்களுடைய வருமானம் சரிபார்க்கப்படும். ஆகவே, சரிபார்ப்பு செயல்முறையில் எந்த ஒரு குளறுபடியும் ஏற்படாமல் இருப்பதற்கு, பர்சனல் லோனுக்கு சரியான முறையில் எப்படி விண்ணப்பிப்பது மற்றும் அதற்குத் தேவையான டாக்குமென்ட்கள் யாவை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பர்சனல் லோனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஒப்பிட்டுப் பார்த்தல்: பர்சனல் லோன்களை நீங்கள் வங்கிகள் அல்லது ஆன்லைன் அப்ளிகேஷன்கள் மூலமாகப் பெறலாம். ஆனால், ஒரு கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, பல்வேறு கடன் வழங்குநர்கள் வழங்கும் வட்டி விகிதங்கள், பிராசசிங் கட்டணங்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வழங்கப்படும் கால அவகாசங்கள், தகுதி வரம்புகள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.
தகுதி வரம்புகளைச் சரிபார்த்தல்: உங்களுக்குத் தேவையான கடன் தொகைக்கு நீங்கள் தகுதி பெறுவீர்களா என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் ஆன்லைன் எலிஜிபிலிட்டி கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம்.
டாக்குமென்ட்களைத் தயார்நிலையில் வைத்தல்: வருமானம், முகவரி, அடையாளச் சான்றிதழ் போன்றவற்றை லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்னரே தயார்நிலையில் வையுங்கள்.
ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் விண்ணப்ப செயல்முறை:
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், உங்களால் ஒரு சில நிமிடங்களிலேயே வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் பர்சனல் லோன் வாங்க முடியும். இதற்கு நீங்கள் அப்ளிகேஷன்கள் அல்லது அதிகாரப்பூர்வ வெப்சைட்டுகளுக்குச் சென்று தேவையான செயல்முறையைப் பூர்த்தி செய்ய வேண்டும். மாறாக, நேரடியாக வங்கிக்குச் சென்றும் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிக்க: பேஸ் ஐடி, QR குறியீடு அம்சங்களுடன் புதிய ஆதார் ஆப் அறிமுகம்…! தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்…
டாக்குமென்ட்களைச் சமர்ப்பித்தல்:
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, தேவையான டாக்குமென்ட்களை அப்லோடு செய்ய வேண்டும்.
கடன் அங்கீகரிப்பு மற்றும் வழங்கல்:
அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டதும், உங்களுக்கான கடன் அங்கீகரிக்கப்பட்டு, ஒரு சில நிமிடங்களில் உங்களுடைய அக்கவுண்டில் கடன் தொகை கிரெடிட் செய்யப்படும்.
பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கத் தேவையான டாக்குமென்ட்கள் யாவை?
அடையாளச் சான்றிதழ்:
ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது பாஸ்போர்ட் முகவரிச் சான்றிதழ்.
முகவரிச் சான்றிதழ்:
ஆதார் அட்டை, மின்சார ரசீது, தண்ணீர் வரி ரசீது, கேஸ் ரசீது, வாடகை ஒப்பந்தம், பாஸ்போர்ட்
வருமானச் சான்றிதழ்:
வருமானத்திற்கான நிரூபணம் என்பது மாத வருமானம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஃப்ரீலான்சர்கள் ஆகியோருக்கு மாறுபடும்.
இதையும் படிக்க: கடன் வழங்கும் வட்டி விகிதங்களை குறைத்த முன்னணி வங்கிகள்… குஷியில் கஸ்டமர்கள்…!
மாத வருமானம் பெறுபவர்களுக்கு:
- குறைந்தபட்சம் ₹15,000 முதல் ₹20,000 வரையிலான வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
- மேலும், அவர்கள் ஒரே நிறுவனத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை வேலை செய்திருக்க வேண்டும்.
- சேலரி ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மெண்ட் மற்றும் படிவம் 16 தேவைப்படும்.
சுயதொழில் செய்து வருபவர்கள்:
- தங்களுடைய தொழில் மூலமாக குறைந்தபட்சம் 2 முதல் 3 வருடங்கள் தொடர்ச்சியான வருமானத்தை ஈட்டி இருக்க வேண்டும்.
- கடன் வழங்குநர் நியமிக்கும் ஆண்டுவாரியான டர்ன் ஓவரைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- இன்கம் டேக்ஸ் ரிட்டன், பேங்க் ஸ்டேட்மெண்டுகள், பிராஃபிட் லாஸ் ஸ்டேட்மென்ட் தேவை.
பென்ஷனர்களுக்கு:
- நிலையான பென்ஷன் வருமானம் இருக்க வேண்டும்.
- பென்ஷன் ஸ்டேட்மென்ட் மற்றும் பேங்க் ஸ்டேட்மென்ட் அவசியம்.
இதையும் படிக்க: பர்சனல் லோன்களுக்கு KYC ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்முறையை நிறைவு செய்வது எப்படி…?
ஃப்ரீலான்சர்களுக்கு:
- கடந்த 6 முதல் 12 மாதங்களுக்குத் தொடர்ச்சியான வருமானம் பெற்றிருக்க வேண்டும்.
- ஒருவேளை உங்களிடம் நிலையான வருமானம் இல்லாவிட்டாலும்கூட, வாடகை ரசீதுகள், முதலீடு மூலமாகக் கிடைக்கும் வருமானம் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் ஸ்டேட்மெண்டுகள் போன்றவற்றை நீங்கள் நிரூபணமாகக் காட்டலாம் அல்லது நிலையான வருமானம் பெறும் ஒரு துணை விண்ணப்பதாரர் மூலமாக உடனடியாக உங்களுடைய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
- தங்கம், சொத்து அல்லது ஃபிக்சட் டெபாசிட்கள் போன்றவற்றை அடமானமாகக் காட்டுவதும் உதவக்கூடும். நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு உடனடியாக கடன் அங்கீகரிக்கப்படும்.
April 10, 2025 6:50 PM IST
Personal loan | பர்சனல் லோனுக்கு உடனடி அப்ரூவல் செய்ய இந்த டிப்ஸ் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்…! என்ன தெரியுமா…?

