மதுரை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகின்றது. குறிப்பாக மதுரை மாநகரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்து வருகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு மதுரையை இன்னும் மேம்படுத்தக் கூடிய வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சிறப்பு வசதிகள் மதுரை மாநகர் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் சுமார் ரூ.119 கோடி மதிப்பீட்டில் பார்க்கிங் வசதி மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டது.
இதையும் படிங்க: நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாள் தடை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த வணிக வளாகத்தில் 475 கடைகளும், மின் தூக்கி, எல்.இ.டி மின் விளக்குகளுடன் நடைபாதை, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 300க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வகையில் தரைத்தளத்தில் பார்க்கிங் வசதியுடன் கட்டப்பட்டது.
ஆனால் இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் நீண்ட நாட்கள் ஆகவே இந்த வணிக வளாகம் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது.
இதனை அடுத்து தற்பொழுது வணிக வளாகத்தில் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்கவும், கூடுதலாக எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தக் கூடிய வகையில் புதிய வரைபடம் ஒன்று தயார் செய்யப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
