சுவீடனை போலவே நீண்ட காலமாகப் போரில் ஈடுபடாத (அல்லது ராணுவமில்லாத) இன்னும் சில நாடுகளும் உள்ளன. அவை, சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா, ஐஸ்லாந்து, வாடிகன் சிட்டி, பனாமா, லீக்டன்ஸ்டைன், அந்தோரா, சான் மரினோ ஆகியவையாகும். இவற்றில் சுவிட்சர்லாந்து கடந்த 1815-ஆம் ஆண்டிலிருந்து (சுமார் 210 ஆண்டுகளாக) நாடு எந்தவொரு வெளிநாட்டுப் போரிலும் பங்கேற்கவில்லை. அதனாலேயே இந்நாடு உலக அளவில் நடுநிலை நாடு என அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


