ரிசர்வ் வங்கியின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் சேவைகள் நிறுத்தப்பட்டன. அத்துடன், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து யுபிஐ சேவைகளை வழங்க அனுமதிக்கப்பட்டது. எனவே, பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் மூலம் வழங்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகள் அனைத்தும் மேற்கூறிய 4 வங்கிகளுக்கு மாற்றப்பட்டன.
இதனால், பேடிஎம் பயன்படுத்துவோர், பேடிஎம் செயலியை திறக்கும்போது, புதிய யுபிஐ ஐடியை உருவாக்க அறிவுறுத்தப்படுவார்கள். முன்பு பேடிஎம் செயலி மூலம் வழங்கப்பட்ட யுபிஐ ஐடியில் உங்கள் மொபைல் என்ணுடன் @Paytm என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இனி அதே மொபைல் எண்ணுடன் @ptsbi @pthdfc @ptaxis @ptyes என்று 4 வங்கிகளின் யுபிஐ ஐடியாக மாறிவிடும்.
இந்த 4 வங்கிகளின் யுபிஐ ஐடியில் ஏதாவது ஒன்றை, பேடிஎம் பயன்பாட்டாளர்களே தேர்வு செய்து கொள்ளலாம். இதை அப்டேட் செய்து கொண்டால் மட்டுமே, இனி வரும் நாட்களில் நீங்கள் பேடிஎம் மூலம் பரிவத்தனைகளை செய்ய முடியும்.
இதையும் படிக்க:
உங்களுடைய PF கணக்கில் எவ்வளவு உள்ளது..? ஆன்லைனில் சரிபார்க்க வழிமுறைகள் இதோ
எனவே முதலில் பேடிஎம் செயலியில் புரொபைல் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். அதில் UPI and Payments Settings -ஐ பார்த்தால், அதில் பேடிஎம் யுபிஐ ஐடி இருக்கும். அதில் Edit ஆப்சனை தேர்வு செய்து, Manage UPI ID என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், மேலே சொன்னவாறு 4 வங்கிகளின் யுபிஐ ஐடிகள் இருக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்து, ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதன்பிறகு, உங்களது செல்போன் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வரும். அடுத்த சில நொடிகளில் புதிய யுபிஐ ஐடி ஆக்டிவேட் ஆகிவிடும். இதன்பிறகு நீங்கள் வழக்கம்போல, உங்களது பேடிஎம் செயலியை பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
