• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Panama : பானாமா கால்வாய் பிரச்னையில் பாய்ச்சல் காட்டும் ட்ரம்ப் – ஒப்பந்த பின்னணியும் சிக்கலும்!

GenevaTimes by GenevaTimes
December 25, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Panama : பானாமா கால்வாய் பிரச்னையில் பாய்ச்சல் காட்டும் ட்ரம்ப் – ஒப்பந்த பின்னணியும் சிக்கலும்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எச்சரித்த ட்ரம்ப்பனாமா கால்வாய்

1880-ல் பிரெஞ்சு அரசால் தொடங்கப்பட்டு, பின்னர் நிதி பிரச்னையால் கைவிடப்பட்ட பனாமா கால்வாய் திட்டத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா கையிலெடுத்து கட்டி முடித்தது. அப்போதைய அதிபராக தியோடர் ரூஸ்வெல்ட் ‘இந்த பனாமா கால்வாய், நாட்டு மக்கள் பெருமையோடு திரும்பிப் பார்க்கும் ஒரு மகத்தான சாதனையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டார். ஆனால், ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அதே கால்வாயை அமெரிக்கா திரும்ப கைப்பற்றும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் விரைவில் அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப்!

அமெரிக்கக் கப்பல் மற்றும் கடற்படைக் கப்பல்களுக்கு மத்திய அமெரிக்க நாடான பனாமா அதிகமான கட்டணம் வசூலிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப், கட்டணத்தைக் குறைக்கவில்லை எனில், பனாமா கால்வாயை அமெரிக்காவில் கட்டுப்பாட்டில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

பானாமா கால்வாய்

பனாமாவுக்கு மத்தியில் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைப்பதற்காக சுமார் 82 கிலோமீட்டர் தொலைவுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நீர்வழிப்பாதை. இது இல்லையென்றால் கப்பல்கள் தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் உள்ள கேப் ஹார்னைச் சுற்றி செல்ல சுமார் 11,000 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க வேண்டியிருக்கும். இந்தக் கால்வாய் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கு குறிப்பிடத்தக்க நேரத்தையும், எரிபொருள் செலவையும் குறைக்கிறது.

எகிப்தின் சூயஸ் கால்வாயைக் கட்டிய ஃபெர்டினாண்ட் டி லெஸ்செப்ஸ் தலைமையில் பனாமா கால்வாயை அமைப்பதற்கான முயற்சி 1880-ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆபத்தான மற்றும் கடுமையான நிலப்பரப்பில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை மலேரியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் பிற வெப்பமண்டல நோய்கள் தாக்கியதில் ஒட்டுமொத்தமான 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

Panama Canal: வறண்டு போகும் பனாமா கால்வாய்; 270 பில்லியன் டாலர் வர்த்தகத்துக்குச் சிக்கல்!

பனாமா அப்போது கொலம்பியாவின் ஒரு மாகாணமாக இருந்தது. கால்வாய் கட்ட அமெரிக்காவுக்கு ஒப்புதல் வழங்கும் 1901 ஒப்பந்தத்தை ஏற்க பனாமா ஏற்கவில்லை மறுத்தது. இதன் விளைவாக பனாமாவின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடற்கரைகளுக்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் அனுப்பிவைத்தார்.

பனாமா சுதந்திரம் பெற்ற பிறகான ஓர் அரசியலமைப்பை அமெரிக்கா முன்னரே எழுதி தயார் செய்தது. மேலும், பனாமாவின் எந்தப் பகுதியிலும் தலையிடவும், பொது அமைதி மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டவும் அமெரிக்கப் படைகளுக்கு கட்டுப்பாடற்ற உரிமையை வழங்கியது.

1903-ஆம் ஆண்டு நவம்பரில் பனாமாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. விரைவிலேயே கால்வாய் கட்டுமானத்தை தொடங்க அமெரிக்கா தலைமையிலான குழுவுக்கு அனுமதியளிக்கும் ஓர் ஒப்பந்தத்தில் பனாமா கையெழுத்திட்டது. அமெரிக்கா தலைமையிலான கட்டுமான பணிகளின்போது 5,600 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒப்பந்தம் சொல்வது என்ன?

ஒருவழியாக பணிகள் முடித்து 1914-ஆம் ஆண்டு பனாமா கால்வாய் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால், உடனடியாக பனாமா மக்கள் பலரும், கால்வாய் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இது தொடர்ந்து நீடித்ததால், 1930-களில் பனாமாவில் தலையிடும் தனது உரிமையை அமெரிக்கா ரத்து செய்தது. 1970-களில், நிர்வாகச் செலவுகள் கடுமையாக அதிகரித்த நிலையில், கால்வாயின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க பனாமாவுடன் அமெரிக்க அரசு பல ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போதைய அதிபர் ஜிம்மி கார்ட்டரின் நிர்வாகம், பனாமா ராணுவ தலைவராக இருந்த ஒமர் டோரிஜோஸின் அரசாங்கத்துடன் இணைந்து ஆலோசித்தது. ‘நிரந்தர நடுநிலை ஒப்பந்தம்’ மற்றும் ‘பனாமா கால்வாய் ஒப்பந்தம்’ ஆகிய இரண்டு ஒப்பந்தங்களை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிப்பதே ஒப்புதலுக்கான சிறந்த வாய்ப்பு என்று இரு தரப்பினரும் இறுதியில் முடிவு செய்தனர்.

முதல் ஒப்பந்தம், கால்வாய் எப்போதும் திறந்திருப்பதையும் பாதுகாப்பாகவும் இருப்பதையும் உறுதிசெய்வதற்கான உரிமையை அமெரிக்காவுக்கு வழங்குகிறது. இரண்டாவது ஒப்பந்தம், டிசம்பர் 31, 1999 அன்று கால்வாயை பனாமா அரசிடம் அமெரிக்கா முழுமையாக ஒப்படைந்து விட வேண்டும் என்று கூறியது. ஆனால் பின்னர் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இரண்டு ஒப்பந்தங்களும் 1977-ல் கையெழுத்திடப்பட்டு அடுத்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. 1989-க்குப் பிறகும் கூட, பனாமா தலைவர் மானுவல் நோரிகாவை ஆட்சியை விட்டு அகற்ற, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் H.W.புஷ் பனாமா மீது படையெடுத்தபோதும் இரண்டும் ஒப்பந்தங்களும் அமலில் இருந்தன.

1970-களின் பிற்பகுதியில், ஒப்பந்தங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், கால்வாய் கட்டுப்பாட்டை பனாமாவுக்கு விட்டுக்கொடுக்கும் முடிவை அமெரிக்கர்களில் பாதி பேர் எதிர்த்ததாக கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இருப்பினும், 1999-ஆம் ஆண்டில் கால்வாய் மீதான உரிமை பனாமாவுக்கு கைமாறிய நேரத்தில், அமெரிக்கர்களில் பாதி பேர் அதற்கு ஆதரவு தெரிவித்ததாக கருத்து கணிப்புகள் வெளியானது.

ட்ரம்ப் ஆத்திரம் ஏன்?

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தை விட பனாமா அரசின் கீழ கால்வாய் மிகவும் திறம்பட செயல்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரை கால்வாயில் கப்பல் போக்குவரத்து 17 சதவீதம் அதிகரித்தது. மேலும் பெரிய கார்கோ கப்பல்களை கால்வாயில் அனுமதிக்கும் விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு வரை நீடித்த இந்த விரிவாக்கத்துக்கு சுமார் 5.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானது.

ட்ரம்ப்

கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால், கால்வாயில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கப்பல் போக்குவரத்தை கடுமையாகக் குறைத்து, அதைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை பனாமா அரசு உயர்த்தியது. தற்போது போதுமான மழை பொழிந்து இயல்பு நிலை திரும்பிவிட்டாலும், நவீன கப்பல் போக்குவரத்துக்கு இடமளிக்கும் வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதால் எதிர்கால கட்டண உயர்வு அவசியமாக இருக்கலாம் என்று பனாமா கூறுகிறது.

பனாமாவின் இந்தக் கட்டண உயர்வை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் 1977-ல் போடப்பட்ட ஒப்பந்தம் முட்டாள்த்தனமாக போடப்பட்டது என்றும், பனாமா தங்களை நியாயமான முறையில் நடத்தவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு பதில் கொடுத்துள்ள, பனாமா அதிபர் ஜோஸ் ரால் முலினோ, “கால்வாயின் ஒவ்வொரு சதுர மீட்டரும் பனாமாவுக்கு சொந்தமானது. இனியும் அப்படியே தொடரும். சில முக்கிய பிரச்னைகளில் எங்கள் நாட்டு மக்கள் பிளவுபட்டிருந்தாலும், எங்கள் கால்வாய், எங்கள் இறையாண்மை என்று வரும்போது நாங்கள் அனைவரும் எங்கள் பனாமா கொடியின் கீழ் ஒன்று திரள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

பனாமா உடன் போருக்கு செல்லாமல் 1970-களில் போடப்பட்ட கால்வாய் ஒப்பந்ததை ட்ரம்ப்பால் ரத்து செய்யமுடியாது என்கின்றனர் உலக அரசியல் நோக்கர்கள். ஏற்கெனவே இஸ்ரேல் – பாலஸ்தீனம், இஸ்ரேல் – சிரியா, ரஷ்யா – உக்ரைன் என உலகமே போர் பதற்றத்தில் இருந்துகொண்டிருக்கும் இந்த சூழலில் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கை உலக நாடுகள் மத்தியில் மேலும் அழுத்தத்தை கூட்டுவதாக உள்ளது.!

பனாமா ஆவணம்: இந்தியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சொல்கிறார் பிரகாஷ் காரத்!

Read More

Previous Post

கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் டிச.28-ல் சப்-ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடக்கம் | sub junior netball championship to start on december 28

Next Post

கிறிஸ்துமஸ் நாளில் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் – சிலாங்கூர் சுல்தானின் வாழ்த்து செய்தி | Makkal Osai

Next Post
கிறிஸ்துமஸ் நாளில் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் – சிலாங்கூர் சுல்தானின் வாழ்த்து செய்தி | Makkal Osai

கிறிஸ்துமஸ் நாளில் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் - சிலாங்கூர் சுல்தானின் வாழ்த்து செய்தி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin