Last Updated:
ஏற்கனவே பொதுவான காலக்கெடு முடிந்துவிட்டதால், இப்போது இணைக்க விரும்புபவர்கள் ₹1,000 அபராதம் செலுத்தித்தான் இணைக்க முடியும்.
பான் மற்றும் ஆதார் எண்களை இணைப்பதற்கு ஏற்கனவே பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆதார் – பான் இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செயல் இழந்து விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்ப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி மிக எளிதாக சரிபார்க்கலாம். அதற்கு பின்வரும் வழிகள் உள்ளன.
முதலில் வருமான வரித் துறையின் incometax.gov.in என்கிற இ-ஃபைலிங் (e-Filing) போர்ட்டலுக்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள ‘Quick Links’ பிரிவில் ‘Link Aadhaar Status’ என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் உங்கள் PAN எண் மற்றும் 12 இலக்க ஆதார் எண் ஆகியவற்றை சரியாக உள்ளிடவும். விவரங்களை உள்ளிட்ட பிறகு, ‘View Link Aadhaar Status’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்
உங்கள் பான் மற்றும் ஆதார் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால்: “Your PAN is already linked to given Aadhaar” என்ற விபரம் வரும். இணைக்கப்படவில்லை என்றால்: “PAN not linked with Aadhaar. Please click on ‘Link Aadhaar’ to link your Aadhaar with PAN” என்ற மெசேஜ் வரும்.
டிசம்பர் 31-க்குள் இணைக்கத் தவறினால், ஜனவரி 1, 2026 முதல் உங்கள் பான் கார்டு செயலிழந்து போகும். இதனால் வங்கிப் பரிவர்த்தனைகள், வருமான வரி தாக்கல் (ITR) மற்றும் வரி ரீஃபண்ட் பெறுவதில் சிக்கல் ஏற்படும். ஏற்கனவே பொதுவான காலக்கெடு முடிந்துவிட்டதால், இப்போது இணைக்க விரும்புபவர்கள் ரூ. 1,000 அபராதம் செலுத்தித்தான் இணைக்க முடியும்.


