இந்தியாவில் PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. PAN மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதியாக மே 31, 2024 வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு செய்ய தவறும் வரி செலுத்துவோர் அதிக TDS தொகையை செலுத்த வேண்டி இருக்கும். இதனை தவிர்ப்பதற்கு கட்டாயமாக உங்களுடைய பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள். ஒருவேளை அதனை எப்படி செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், PAN கார்டு மற்றும் ஆதார் கார்டை எப்படி இணைக்கலாம் என்பதற்கான படிப்படியான வழிகாட்டுதலை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
PAN என்று அழைக்கப்படும் பெர்மனண்ட் அக்கவுண்ட் நம்பர் என்பது இந்தியாவில் உள்ள வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறையினரால் வழங்கப்படும் 10 இலக்க அடையாள எண்ணாக அமைகிறது. ஆதார் அட்டை என்பது மறுபுறம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) இந்திய வாழ் மக்களுக்கு வழங்கும் தனித்துவமான 12 இலக்க அடையாள எண் ஆகும். PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலமாக வரி தாக்கல் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு, போலி PAN கார்டுகள் அகற்றப்பட்டு, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்படுகிறது.
PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி தேதி இன்று மே 31, 2024 வரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு நீங்கள் செய்ய தவறினால் அதிக அளவு TDS தொகை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள். எனவே இந்த பதிவில் உங்களுடைய PAN கார்டை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என்பதை பார்க்கலாம்.
1. incometaxindiaefiling.gov.in. என்ற வருமானவரி துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.
2. Quick links என்ற பிரிவுக்கு சென்று, அங்கு காணப்படும் Link Aadhaar என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
3. உங்களுடைய PAN கார்டில் உள்ள எண் மற்றும் ஆதார் எண்ணை என்டர் செய்து Validate என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
4. உங்களுடைய ஆதார் கார்டில் குறிப்பிட்டுள்ளபடி உங்களுடைய பெயர் மற்றும் மொபைல் நம்பரை என்டர் செய்யுங்கள்.
5. பின்னர் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
6. உங்கள் மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள OTP -ஐ என்டர் செய்து, இந்த PAN மற்றும் ஆதார் இணைத்தல் செயல்முறையை நிறைவு செய்ய Validate பட்டனை கிளிக் செய்யவும்.
இந்த எளிமையான படிகளை பின்பற்றி வீட்டிலிருந்தபடியே உங்களுடைய PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
