ஆனால், நம்மில் பலருக்கு இன்னும் இந்த ஆவணத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. PAN என்றால் என்ன?, அதில் குறிப்பிடப்பட்டுள்ள 10 எழுத்துக்கள் மற்றும் எண்கள் எதைக் குறிக்கின்றன மற்றும் PAN கார்டு ஹோல்டர்களின் வகைகள் ஆகியவற்றைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
PAN கார்டு என்றால் என்ன?
PAN என்பது அனைத்து பொருளாதார சம்பந்தப்பட்ட பணப் பரிமாற்றங்களையும் இணைக்கக்கூடிய ஒரு தனித்துவமான அடையாள அட்டையாக அமைகிறது. இதில் இந்திய வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்ட 10 இலக்க எண்கள் மற்றும் எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இது இந்தியாவில் உள்ள தனிநபர்கள், நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு, அதிக மதிப்பு கொண்ட டிரான்ஸ்சாக்ஷன் செய்வதற்கு, சொத்து வாங்குவதற்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட், ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் முதலீடு செய்ய ஒருவர் இந்த PAN கார்டை பயன்படுத்தலாம்.
PAN நம்பர் அர்த்தத்தை புரிந்து கொள்ளுதல்:
PAN அமைப்பு
‘ABCDE1234F’ என்ற ஒரு PAN நம்பர் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
இதில் இருக்கக்கூடிய முதல் 3 எழுத்துக்கள் AAA முதல் ZZZ வரை உள்ள எழுத்து வரிசையை குறிக்கிறது.
நான்காவது எழுத்தானது PAN ஹோல்டரின் வகையை குறிக்கும். அதாவது தனிநபர், நிறுவனம், HUF, AOP, BOL, அரசு ஏஜென்சி, செயற்கை நீதித்துறை நபர், உள்ளாட்சி அமைப்பு, கூட்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை போன்றவை இதில் அடங்கும்.
ஐந்தாவது எழுத்தானது PAN கார்டு ஹோல்டரின் கடைசி பெயர் அல்லது குடும்பப் பெயரின் முதல் எழுத்து அல்லது நிறுவனத்தின் பெயரை குறிக்கும்.
எழுத்துக்களுக்கு பிறகு அமைந்திருக்கும் நான்கு எண்கள் 0001 முதல் 9999 வரை குறிப்பிடப்பட்டிருக்கும்.
இறுதி எழுத்தானது அகரவரிசை சரிபார்ப்பு இலக்கத்தை பற்றி கூறுகிறது.
PAN கார்டு வெரிஃபை செய்வது எப்படி?
NSDL இ-கவர்னன்ஸ் சர்வீஸ் போர்ட்டலுக்கு சென்று உங்களுடைய PAN கார்டை ஆன்லைனில் நீங்கள் வெரிஃபை செய்யலாம். முதலில் இன்கம் டேக்ஸ் இ-பைலிங் போர்ட்டல் வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.
அங்கு ‘வெரிஃபை PAN ஸ்டேட்டஸ்’ என்பதை கிளிக் செய்யவும்.
பெயர், மொபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்களுடைய PAN விவரங்களை என்டர் செய்யுங்கள்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள OTP-ஐ என்டர் செய்து, ‘வேலிடேட்’ என்பதை கிளிக் செய்யவும்.
Read More