காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாத தாக்குதலால் 28 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உலக தலைவர்களும் இந்தியாவிற்கு தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி – வாகா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகள் இந்திய அரசால் எடுக்கப்பட்டது.
மேலும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் செயலை போர் தொடுத்ததாகவே கருதுவோம் என கூறியுள்ளது. மேலும் இந்தியாவிற்காக வான்பரப்பு மூடப்படுவதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது. மேலும் பிகாரில் இந்த தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதிகளுக்கு கனவிலும் நினைத்திராத பதிலடி கொடுக்கப்படும் என கூறினார்.
சித்தராமையா சொன்ன கருத்து:
இந்த விவகாரம் நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, மைசூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பாகிஸ்தானுடன் போர் தொடுக்க வேண்டிய அவசியமில்லை. காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. காஷ்மீரில் அமைதியை உறுதி செய்ய, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். (அனைத்துக் கட்சி கூட்டம்) ஒரு முக்கியமான கூட்டம் என்பதால் பிரதமர் அதில் இருந்திருக்க வேண்டும். ஆனால் பிரதமருக்கு இந்தக் கூட்டத்தைவிட பீகார் தேர்தல் பிரச்சாரம் முக்கியமானது போல் தெரிகிறது. அவர் மக்களை முட்டாளாக்குகிறார்” எனத் தெரிவித்தார்.
பாஜகவின் கண்டனங்கள்:
சித்தராமையாவின் இந்தக் கருத்திற்கு பாஜக கடுமையான கண்டனங்களை பதிவு செய்துவருகிறது. அந்த வகையில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “உலகம் முழுக்க இந்தியாவுக்கு இரங்கலை தெரிவித்துவருகிறது. பயங்கரவாதிகளுக்கு இந்தியா பாடம் புகட்ட வேண்டும் என பல நாடுகளும் தெரிவித்துவருகின்றன. இதற்கிடையில், குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம், நமது பாதுகாப்பை பலப்படுத்துங்கள் என்று முதல்வர் சித்தராமையா கூறியது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தார்.
ಇಡೀ ವಿಶ್ವವೇ ಭಾರತಕ್ಕೆ ಸಾಂತ್ವನ ಹೇಳುತ್ತಿದೆ. ಭಯೋತ್ಪಾದಕರಿಗೆ ಅವರಿಗೆ ಅರ್ಥವಾಗುವ ಹಾಗೆಯೇ ಪಾಠ ಕಲಿಸಲು ಭಾರತಕ್ಕೆ ಬಹುತೇಕ ದೇಶಗಳು ಹೇಳುತ್ತಿವೆ. ಈ ಮಧ್ಯೆ ಭಯೋತ್ಪಾದಕ ಚಟುವಟಿಕೆಯಲ್ಲಿ ತೊಡಗಿರುವವರನ್ನು ಶಿಕ್ಷಿಸುವುದು ಬೇಡ ನಮ್ಮ ಭದ್ರತೆಯನ್ನು ಬಲಪಡಿಸಿ ಎಂದು ಹೇಳುವ ಮುಖ್ಯಮಂತ್ರಿ ಸಿದ್ದರಾಮಯ್ಯನವರ ಮಾತು ಖಂಡನೀಯ.
ಪಹಲ್ಗಾಮ್… pic.twitter.com/8MmqgrGxzx
— Pralhad Joshi (@JoshiPralhad) April 26, 2025
கர்நாடகாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், “சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களால் பாகிஸ்தானில் உலகப் புகழ்பெற்றவராக சித்தரமையா மாறியுள்ளார். நாடு மிகவும் உணர்ச்சிகரமான சூழ்நிலையை எதிர்கொண்டு, எல்லையில் போர் அச்சுறுத்தல் இருக்கும் போது, நீங்கள் ஒரு எதிரி நாட்டின் கைப்பாவை போல செயல்படுகிறீர்கள். பொது வாழ்வில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் நம் நாட்டின் மிகப்பெரிய சோகம்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இத்துடன் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் சித்தராமையா கருத்து குறித்து வெளியான செய்தி காணொளியையும் இணைத்துள்ளார்.
“ಪಾಕಿಸ್ತಾನ ರತ್ನ” ಸಿಎಂ @siddaramaiah ನವರೇ,
ತಮ್ಮ ಬಾಲಿಶ, ಅಸಂಬದ್ಧ ಹೇಳಿಕೆಗಳಿಂದ ಈಗ ರಾತ್ರೋರಾತ್ರಿ ಪಾಕಿಸ್ತಾನದಲ್ಲಿ ವರ್ಲ್ಡ್ ಫೇಮಸ್ ಆಗಿಬಿಟ್ಟಿದ್ದೀರಿ. ತಮಗೆ ಅಭಿನಂದನೆಗಳು. ಮುಂದೆಂದಾದರೂ ತಾವು ಪಾಕಿಸ್ತಾನಕ್ಕೆ ಭೇಟಿ ಕೊಟ್ಟರೆ ತಮಗೆ ರಾಜಾತಿಥ್ಯ ಗ್ಯಾರೆಂಟಿ. ಪಾಕಿಸ್ತಾನದ ಪರ ವಕಾಲತ್ತು ವಹಿಸಿದ ಮಹಾನ್ ಶಾಂತಿದೂತ ಎಂದು… pic.twitter.com/OjcCkrEMtb
— R. Ashoka (@RAshokaBJP) April 27, 2025
இதையும் படியுங்கள் : Pahalgam attack: என்.ஐ.ஏ.விடம் இருக்கும் முக்கிய வீடியோ.. நியூஸ்18க்கு கிடைத்த Exclusive தகவல்
சித்தராமையா கொடுத்த விளக்கம்:
தனது கருத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தனது கருத்து குறித்து விளக்கம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “போர் எப்போதும் ஒரு நாட்டின் கடைசி முயற்சியாக இருக்க வேண்டும் – ஒருபோதும் முதல் வழி அல்ல, ஒரே வழியுமல்ல. எதிரியைத் தோற்கடிப்பதற்கான மற்ற எல்லா வழிகளும் தோல்வியடைந்தால் மட்டுமே, ஒரு நாடு போருக்குச் செல்ல நிர்பந்திக்கப்பட வேண்டும்.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்ட பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், நமது உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு எந்திரத்தில் பெரும் குறைபாடுகள் இருந்தன என்பதை நமது நாட்டு மக்களுக்கும் மத்திய அரசுக்கும் வேதனையுடன் தெளிவுபடுத்தியுள்ளது. முதலில் இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வது இப்போது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
மத்திய அரசு ஏற்கனவே சில ராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அவற்றில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதும் அடங்கும். இந்த நடவடிக்கையை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். இன்னும் கடுமையான நடவடிக்கைகள் வரவிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு நடவடிக்கையையும் உலகிற்கு ஒளிபரப்ப வேண்டிய அவசியமில்லை; உறுதியாக இருங்கள், எடுக்கப்பட்ட ஒவ்வொரு வலுவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைக்கும் பின்னால் நாடு முழுமையாக ஒன்றுபட்டு நிற்கிறது.
அதே நேரத்தில், சில தீய சக்திகள் நாட்டிற்குள் பிளவுகளை ஏற்படுத்தவும், அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கவும் முயற்சிக்கின்றன. அரசாங்கம் அத்தகைய சக்திகளுக்கு எதிராகவும் உறுதியாக செயல்பட வேண்டும்.
I have observed the debates and discussions, both for and against, surrounding the statement I made about war.
War should always be a nation’s last resort — never the first, nor the only option. Only when every other means to defeat the enemy has failed, should a country be…
— Siddaramaiah (@siddaramaiah) April 27, 2025
இன்று, இந்தியா மிகவும் உணர்ச்சிகரமான இடத்தில் நிற்கிறது. வெளிப்புற எதிரிகளை நாம் எதிர்கொள்ள வேண்டுமானால், முதலில் நாம் அசைக்க முடியாத உள் ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.
பாகிஸ்தான் இன்று நொறுங்கி, திவாலான நாடாக, பலவீனமாக உள்ளது. அவர்களிடம் இழப்பதற்கு அதிகம் இல்லை. இதற்கு நேர்மாறாக, இந்தியா உலக அளவில் வளர்ந்து வரும் வல்லரசாக உயர்ந்து வருகிறது. எனவே, நாம் அறிவுக்கூர்மையுடனும், எச்சரிக்கையுடனும் நடக்க வேண்டும்.
இந்த முக்கியமான தருணத்தில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டித்து, இந்தியாவுடன் உறுதியாக நிற்கின்றன. இந்த உலகளாவிய ஆதரவை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களை மீண்டும் ஒருபோதும் செய்யத் துணியாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு ஒரு ஆழமான பாடம் கற்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
April 27, 2025 5:13 PM IST

