• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Pahalgam Attack : “இஸ்லாமியர்களுக்கு எதிராக செல்வதை விரும்பவில்லை” – பலியான கடற்படை வீரரின் மனைவி

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Pahalgam Attack : “இஸ்லாமியர்களுக்கு எதிராக செல்வதை விரும்பவில்லை” – பலியான கடற்படை வீரரின் மனைவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 02, 2025 9:26 PM IST

பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி, இஸ்லாமியர்களுக்கு அல்லது காஷ்மீர் மக்களுக்கு எதிராக செல்வதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

News18News18
News18

இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ, காஷ்மீர் மக்களுக்கு எதிராகவோ மக்கள் செல்வதை விரும்பவில்லை என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகின்றது. அந்த விசாரணையில், மேலும் 3 இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

அதன்படி, அரு பள்ளத்தாக்கு, பீடாப் பள்ளத்தாக்கு மற்றும் பொழுதுபோக்கு பூங்காவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டதாகவும், ஆனால், அங்கு பாதுகாப்பு கெடுபிடி இருந்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்பு பஹல்காமில் பயங்கரவாதிகள் தங்கி இருந்ததாகவும், அவர்களுக்கு 20 பேர் உதவி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இதுவரை 186 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதலில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரரான வினய் நர்வால் என்பவரும் பலியானார். அவரது பிறந்தநாளையொட்டி ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், யார் மீதும், எந்த சமூகத்தின் மீதும் வெறுப்பு பரப்பப்படுவதை விரும்பவில்லை என்றார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ, காஷ்மீர் மக்களுக்கு எதிராகவோ மக்கள் செல்வதை விரும்பவில்லை என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை வீரரின் மனைவி தெரிவித்துள்ளார். ஹனிமூன் சென்ற இடத்தில் கணவரை இழந்த நிலையிலும் அவர் இவ்வாறு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read More

Previous Post

மின்சாரம் தாக்கி இருவர் மரணம்

Next Post

கில், பட்லர் அதிரடி: ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி | ஐபிஎல் 2025 | Gujarat Titans vs Sunrisers Hyderabad LIVE Score, IPL 2025

Next Post
கில், பட்லர் அதிரடி: ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி | ஐபிஎல் 2025 | Gujarat Titans vs Sunrisers Hyderabad LIVE Score, IPL 2025

கில், பட்லர் அதிரடி: ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி | ஐபிஎல் 2025 | Gujarat Titans vs Sunrisers Hyderabad LIVE Score, IPL 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin