அந்த படத்திற்காகவே OTT ஆப்பை பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, OTT சந்தாவை ரத்து செய்ய விரும்புகிறீர்களா? சமீபத்திய கணக்கெடுப்பில், பதிவு செய்வதுபோல் எளிதாக OTT சப்ஸ்கிரிப்ஷனை ரத்து செய்ய முடியாது என்று தெரியவந்துள்ளது.
சமூகதளமான லோக்கல் சர்க்கிள்ஸ் சேகரித்த டேட்டாக்களின்படி, பதிலளித்தவர்களில் 50% பேர் டிஜிட்டல் சேவைகளுக்கான சப்ஸ்கிரிப்ஷன்களை ரத்து செய்வதில் அடிக்கடி சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறினர். மேலும் பல சப்ஸ்கிரிப்ஷன்களில், ரத்துசெய்தல் விருப்பம் கிடைக்காது என்று கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
பெரும்பாலான ஆப் அல்லது வெப் இல் அன்சப்ஸ்கிரிப்ஷன் அல்லது கேன்சல் பட்டன்களை மறைத்து வைத்திருக்கின்றனர் என்றும், அந்த ஆப்ஷனை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் யூசர்கள் கூறுகிறார்கள். இந்த பட்டன்களை கூட வழங்காத பல பிளாட்ஃபார்ம்கள் உள்ளன. இதனால்தான் சப்ஸ்கிரிப்ஷன் எடுத்த பிறகு, யூசர்கள் விரும்பாவிட்டாலும், பல மாதங்கள் இந்த பிளாட்ஃபார்ம்களுக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் 353 மாவட்டங்களில் சுமார் 95,000க்கும் மேற்பட்ட யூசர்களிடமிருந்து பதில்கள் சேகரிக்கப்பட்டது. சில நேரங்களில், சில தளங்கள் இலவச ட்ரெயில்களை வழங்குகின்றன. ஆனால் நீங்கள் அதை ரத்து செய்ய முயற்சிக்கும் போதெல்லாம், அதிலிருந்து வெளியேற உங்களுக்கு எந்த விருப்பமும் கிடைக்காது.
‘டார்க் பேட்டர்ன்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த தந்திரங்கள் இப்போது யூசர்கள் மற்றும் ரெகுலேட்டர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொள்கின்றன என்றும் அறிக்கை கூறியது. அதே நேரத்தில், சப்ஸ்கிரிப்ஷனை எவ்வாறு ரத்து செய்வது என்று தெரியாததால், மீண்டும் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல யூசர்களிடமிருந்து புகார்களும் வந்துள்ளன.
இந்த அறிக்கையால் அடையாளம் காணப்பட்ட மிகவும் பொதுவான டார்க் பேட்டர்ன்களில் ஒன்று சப்ஸ்கிரிப்ஷன் ட்ராப்ஸ் ஆகும். நீங்கள் OTTஇல் பதிவு செய்யும் தருணத்திலேயே நிறுவனங்கள் தங்கள் ட்ரிக்ஸ்களை காட்டுகின்றன. இலவச ட்ரெயில் வழங்கப்பட்டாலும், காலக்கெடு காலாவதியானவுடன் வெளியேற எளிதான வழி இல்லை. அன்சப்ஸ்கிரிப்ஷன் விருப்பத்தையும் கண்டுபிடிப்பது கடினமாகியுள்ளது.
நிறுவனங்கள் சந்தாவின்போது முன்கூட்டியே விலையைக் காட்டுகின்றன. செக்-அவுட் செயல்முறையின்போது, கட்டாயக் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களைச் சேர்க்கின்றன. சப்ஸ்கிரைபர்கள் இந்த வகையான மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். OTT சேவைகளுக்கு சப்ஸ்கிரிப்ஷன் செலுத்தும்போது கூடுதல் கட்டணங்கள் குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று 53% யூசர்கள் தெரிவித்தனர்.
நிறுவனங்கள் தங்கள் சப்ஸ்கிரிப்ஷனை ரத்து செய்த பிறகும் கூட தங்களிடம் கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் கூறுகின்றனர். கணக்கெடுக்கப்பட்டவர்களில் 24% பேர் இந்த சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இந்த செயல்முறையானது எந்தவித எச்சரிக்கையோ அல்லது விளக்கமோ இல்லாமல் நடப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அதாவது சப்ஸ்கிரிப்ஷன் காலாவதி ஆகிவிட்டதாகவும், இனி பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் நினைத்திருக்கும்போது கூட, தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் டெபிட் செய்யப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த பிரச்சினைகளைத் தீர்க்க, 2023ஆம் ஆண்டில், அனைத்து டிஜிட்டல் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தால் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதில், அவர்கள் தங்கள் வெப் அல்லது ஆப்களில் இருந்து டார்க் பேட்டர்ன்களை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்காக, அரசாங்கம் அனைவருக்கும் மூன்று மாத கால அவகாசம் அளித்திருந்தது. ஆனால், சமீபத்திய அறிக்கையின் மூலம் வெளிவந்த மக்களின் புகார்களைப் பார்க்கும்போது, டிஜிட்டல் நிறுவனங்கள் அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கைக்கு அதிக கவனம் செலுத்தவில்லை என்று மட்டுமே கூற முடியும்.
July 22, 2025 12:40 PM IST
OTT பிளாட்ஃபார்ம்களில் சப்ஸ்கிரிப்ஷனை ரத்து செய்வது அவ்வளவு கடினமா…? கணக்கெடுப்பில் தெரிந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…