• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Operation Sindoor: பாகிஸ்தானை விட்டு வெளியேறும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்.. PSL தொடர் நடைபெறுவதில் சந்தேகம்

GenevaTimes by GenevaTimes
May 8, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Operation Sindoor: பாகிஸ்தானை விட்டு வெளியேறும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்.. PSL தொடர் நடைபெறுவதில் சந்தேகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 08, 2025 5:00 PM IST

இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

PSL தொடர் அணிகளின் கேப்டன்கள் PSL தொடர் அணிகளின் கேப்டன்கள்
PSL தொடர் அணிகளின் கேப்டன்கள்

இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் விளைவாக பாகிஸ்தான் நாட்டில் பி.எஸ்.எல் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர்.

இதனால் இந்த பி.எஸ்.எல் கிரிக்கெட் தொடர் இனிமேல் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடி தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை தற்போது ஏற்படுத்தி வருகிறது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு உள்நாட்டில் பலப்படுத்தி உள்ளது. இந்த அதிரடி தாக்குதலை நினைத்துப் பார்க்க முடியாத பாகிஸ்தான் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாற தொடங்கியுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை போன்று பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் எனப்படும் PSL போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள். இதனால் PSL கிரிக்கெட் தொடர் தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் காரணமாக பல ஆண்டுகளாக வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானுக்கு வராத சூழ்நிலை இருந்தது கவனிக்கத்தக்கது.

Read More

Previous Post

‘தோல்விதான் என்னும் வயிற்றெரிச்சலில்.. வடிகட்டிய பொய்களைத் திரட்டி புலம்பும் புலம்பல் சாமி’ ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

Next Post

ஜப்பானில் வெளிநாட்டு பெண் மர்ம மரணம்: இலங்கையர் அதிரடி கைது!

Next Post
ஜப்பானில் வெளிநாட்டு பெண் மர்ம மரணம்: இலங்கையர் அதிரடி கைது!

ஜப்பானில் வெளிநாட்டு பெண் மர்ம மரணம்: இலங்கையர் அதிரடி கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin