• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

OpenAI நிறுவனத்தில் முக்கிய பதவிக்கு செல்லும் இந்திய பெண்.. மெட்டா நிறுவனத்திற்கு ‘பை பை’! | Meta India Head Sandhya Devanathan Steps Down to Join OpenAI as VP for Southeast Asia and Australia

GenevaTimes by GenevaTimes
August 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
OpenAI நிறுவனத்தில் முக்கிய பதவிக்கு செல்லும் இந்திய பெண்.. மெட்டா நிறுவனத்திற்கு ‘பை பை’! | Meta India Head Sandhya Devanathan Steps Down to Join OpenAI as VP for Southeast Asia and Australia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


OpenAI நிறுவனத்தில் முக்கிய பதவிக்கு செல்லும் இந்திய பெண்.. மெட்டா நிறுவனத்திற்கு ‘பை பை’!

பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா-வின் இந்திய கிளையின் தலைவர் அஜித் மோகன் 2022ல் பதவி விலகியதை தொடர்ந்து சந்தியா தேவநாதன் இப்பதவிக்கு வந்தார்.

சுமார் 10 ஆண்டுகள் மெட்டா நிறுவனத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஓப்பன்ஏஐ நிறுவனத்திற்கு மாற உள்ளார். சமீபமாக OpenAI நிறுவனத்தில் இருந்து பல மூத்த அதிகாரிகள் வெளியேறியதை தொடர்ந்து தற்போது மெட்டா நிறுவனத்தின் அதிகாரி ஓப்பன்ஏஐ-க்கு மாற உள்ளார்.

OpenAI நிறுவனத்தில் முக்கிய பதவிக்கு செல்லும் இந்திய பெண்.. மெட்டா நிறுவனத்திற்கு 'பை பை'!

சந்தியா தேவநாதன் மெட்டா நிறுவனத்தில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். மெட்டா நிறுவனத்தை விட்டு வெளியேறும் முடிவை சந்தியா தேவநாதன் தனது லிங்க்ட்இன் பதிவில் இனிப்பும் கசப்பும் கலந்த செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் சந்தியா தேவநாதன் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான துணைத் தலைவராக பணியாற்ற உள்ளதாகவும், இந்த பணியை தான் சிங்கப்பூரில் இருந்து மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆசியா-பசிபிக் பகுதிக்கான நிர்வாக இயக்குநர் கிரண் மணி-யின் கீழ் சந்தியா தேவநாதன் பணியாற்ற உள்ளார்.

இப்புதிய பொறுப்பில் ஓப்பன் ஏஐ தளத்தில் வாடிக்கையாளர் வளர்ச்சி, ஓப்பன்ஏஐ தளத்தை நிறுவனங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறது, கூட்டாணிகள், அரசு விதிமுறைகள் தொடர்பான பணிகள் மற்றும் இதர முக்கிய செயல்பாடுகள் கவனிக்க உள்ளார்.

சந்தியா தேவநாதன் 1994-1998ல் ஆந்திர பல்கலைக்கழகத்தில் பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார், அதைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் மேனேஜ்மென்ட் பட்டம் பெற்றார். 2014ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றார்.

இதற்கு முன்பு சந்தியா தேவநாதன் சிட்டி வங்கியில் 10 வருடம், Standard Chartered Bank-யில் 6 வருடம், பேஸ்புக்-ல் 2016ல் சேர்ந்து பல பதவிகளில் பணியாற்றிக் கடைசியாக ஆசியா பசிபிக் (APAC) சந்தையின் கேமிங் பிரிவை வழிநடத்தி வந்த நிலையில் மெட்டா இந்தியாவின் தலைவராக உயர்ந்தார்.

சமீபத்தில் ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் இருந்து டேட்டா சென்டரின் தலைவர் கிரிஸ் மலோன், தலைமை வருவாய் அதிகாரியான டென்னிஸ், எதிக்ஸ் பிரிவின் தலைவர் சோலே பாக்லார், ப்ராடெக்ட் மற்றும் பிஸ்னஸ் அதிகாரியாந பிட்ஜி சிமோ.. இப்படி 10க்கும் அதிகமான மூத்த தலைவர்கள் 2026ல் மட்டும் வெளியேறியுள்ளனர்.

இதேவேளையில் OpenAI நிறுவனத்தின் வர்த்தகம், வருவாய், வாடிக்கையாளர் எண்ணிக்கை என அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளதையும் பார்த்து வருகிறோம். ஏஐ துறை போட்டியில் மெல்ல மெல்ல தனது ஆதிக்கத்தை இழந்து வருகிறது.

Share This Article

English summary

Meta India Head Sandhya Devanathan Steps Down to Join OpenAI as VP for Southeast Asia and Australia

Meta India Head Sandhya Devanathan Steps Down to Join OpenAI as VP for Southeast Asia and Australia — OpenAI நிறுவனத்தில் முக்கிய பதவிக்கு செல்லும் இந்திய பெண்.. மெட்டா நிறுவனத்திற்கு இழப்பு!

Story first published: Friday, August 28, 2026, 20:35 [IST]

Read More

Previous Post

பிரபல ரவுடி ‘துப்பாக்கி செல்வம்’ நள்ளிரவில் வெட்டிப் படுகொலை.. கூடங்குளம் அருகே கொடூரம்! | Thoothukudi Rowdy Thuppakki Selvam Hacked to Death Near Kudankulam, Shock Ensues

Next Post

புகைமூட்டம் மாசுபாட்டை சமாளிக்க மலேசியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது – Malaysiakini

Next Post

புகைமூட்டம் மாசுபாட்டை சமாளிக்க மலேசியாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin