வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே மோதல் பல காலமாகவே நிகழ்ந்து வருகிறது. மேலும் மோதல் கொண்ட இரு நாட்டிற்கு இடையே உள்ள எல்லையில் பதற்றம் மேலோங்கி இருக்கும்.
வட கொரியா, தென் கொரியாவைத் தொடர்ந்து பல வகைகளில் அச்சுறுத்தி வருகிறது. அணு ஆயுதங்களை வைத்து மிரட்டும் வட கொரியாவை நாம் அறிந்திருந்தோம். ஆனால், புது வகையில் `ஒலி”யை ஆயுதமாகக் கொண்டு தற்போது வட கொரியா களமிறங்கியிருக்கிறது.
இந்த நூதன ஒலி ஆயுதம் வேறொன்றுமில்லை… வெறும் ஒலிபெருக்கிகள் தான். பெரிய ஆயுதங்களை விட்டுவிட்டு ஒலிபெருக்கி கொண்டு என்ன தாக்குதல் நடக்கப் போகிறது என்று தோன்றுகிறது அல்லவா.

