Last Updated:
2025ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கைக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை என்பவருக்கு 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.
ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி முதலில் ஐந்து துறைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பொருளாதாரம் சேர்க்கப்பட்டது. தற்போது ஆறு துறைகளில் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
முதல் நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற பரிசுகள் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமிலும், அமைதிப் பரிசு நார்வே நாட்டின் ஓஸ்லோவிலும் வழங்கப்படுகின்றன. விருதுகள் ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை என்பவருக்கு 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
October 09, 2025 4:43 PM IST
Nobel Prize : 2025ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; எந்த நாட்டைச் சேர்ந்தவருக்கு தெரியுமா?


