Last Updated:
2025 இயற்பியல் நோபல் பரிசு ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட், ஜான் மார்ட்டினிஸ் ஆகியோருக்கு அறிவிப்பு.
2025ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட், ஜான் மார்ட்டினிஸ் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.
ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி முதலில் ஐந்து துறைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பொருளாதாரம் சேர்க்கப்பட்டது. தற்போது ஆறு துறைகளில் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
முதல் நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டு வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற பரிசுகள் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமிலும், அமைதிப் பரிசு நார்வே நாட்டின் ஓஸ்லோவிலும் வழங்கப்படுகின்றன. விருதுகள் ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்படுகின்றன. அதன்படி இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட், ஜான் மார்ட்டினிஸ் ஆகிய மூன்று இயற்பியல் அறிஞர்களுக்கு இந்த ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் சர்க்யூட்; மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயந்திர சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக இந்த மூன்று இயற்பியல் அறிஞர்களுக்கும் 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று (6ஆம் தேதி) மருத்துவத்திற்கான நோபல் பரிசு வல்லுனர்களான மேரி ப்ரன்கோ, பிரெட் ராம்ஸ்டெடல், ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
October 07, 2025 3:44 PM IST
Nobel Prize : 2025ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. 3 அறிஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது


