Nobel Prize: மிக சரியான டைமிங்-ல் வந்த அறிவிப்பு..! யார் இந்த ராபர்ட், மைக்கேல்? இவர்கள் செய்தது என்ன..?
உலக நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பது மட்டும் அல்லாமல் மத்திய வங்கிகளின் நடவடிக்கைகளும், அரசுகள் எடுக்கும் முடிவுகளும் பொருளாதார சரிவையும், நாணய மதிப்பைக் கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான நிலையில் உலக நாடுகள் இருக்கும் போது 2026ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு மிகவும் சரியான விஷயத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது முக்கியமான நிகழ்வாக மாறியுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார பிரிவுக்கான நோபல் பரிசு 2 பேருக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் ஈ ஹால் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகிய இருவருக்கு இந்த ஆண்டு பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் Microeconomic foundations of macroeconomic stabilisation என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியும், இதன் முடிவுகளும் உலக நாடுகளில் இருக்கும் கொள்கை வகுப்பார்களுக்குப் பொருளாதாரத்தை மேம்படுத்தப் பெரிய அளவில் உதவியதன் வாயிலாக இந்த நோபல் பரிசு கொடுக்கப்பட்டு உள்ளது.
இதை எளிதாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால் முதல் மைக்ரோ எக்னாமிக்ஸ், மேக்ரோ எக்னாமிக்ஸ் என்பதற்கான விளக்கத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.
மைக்ரோ எக்னாமிக்ஸ் என்பது ஒரு தனிநபர் அல்லது ஒரு குடும்பம், அல்லது ஒரு சிறு நிறுவனம் எப்படி தனது பணத்தை நிர்வாகம் செய்கிறது. அதாவது முதலீடு, சேமிப்பு, செலவு, கடன் வாங்குவது வரையில் அனைத்தையும் பேசுவது தான் Micro economics
இதுவே மேக்ரோ எக்னாமிக்ஸ் என்றால் ஒரு நாட்டின் அளவில் பேசுவது அதாவது நாட்டின் பணவீக்கம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், நாணய மதிப்பு, அன்னிய செவவாணி கையிருப்பு, நிதி நிலை, பட்ஜெட் பற்றாக்குறை, பொருளாதாரம் வளர்ச்சி போன்ற Big Picture கண்ணோட்டத்துடன் பார்ப்பது.
காலம் காலமாக உலக நாடுகள் தன்னுடைய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் என்றால் அதனுடைய சீர்திருத்த மாடல்கள் அனைத்தும் வெறும் மேக்ரோ எக்னாமிக்ஸ் சார்ந்த புள்ளியியல் தரவுகள் அடிப்படையை மட்டுமே நம்பியிருந்தது.
ஆனால் ராபர்ட் ஈ ஹால் மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்டு இவரும் இணைந்து மைக்ரோ எக்னாமிக்ஸ் நிலையைச் சரி செய்தால் மட்டுமே மேக்ரோ எக்னாமிக்ஸை மேம்படுத்த முடியும் என்பதை புதிய பொருளாதார கணக்கீடு மாடல் மூலம் நிரூபித்துள்ளனர்.
அதாவது சாமானிய மக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்காக எடுக்கப்படும் முடிவுகளும், கணிப்புகளும், திட்டங்களுமே ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார மாற்றங்களைத் தீர்மானிக்கின்றன என்பதை தங்களுடைய புதிய பொருளாதார மாடல்கள் மூலம் நிரூபித்துள்ளனர்.
உதாரணமாக மக்கள் எப்போதும் தங்களுடைய தற்போதைய நிதி நிலையைக் காட்டிலும் எதிர்காலத்தில் தங்களுடைய நிலையைக் குறித்து மட்டுமே அதிகமாக யோசிக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் விலைவாசி எப்படி இருக்கும், வட்டி குறையுமா ஆகியவற்றை யோசித்துத் தான் வீட்டை வாங்குவது, தங்கத்தை வாங்குவது, கார் – பைக் வாங்குவது போன்ற முக்கியமான முடிவுகளை எடுக்கின்றனர்.
இதனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் திடீர் ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைக்க ராபர்ட் ஈ ஹால் மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகிய இவரும் இணைந்து தயாரித்த புதிய பொருளாதார மாடல்கள் பெரிதும் உதவும் என்பதன் அடிப்படையில் நோபல் பரிசு கொடுக்கப்பட்டு உள்ளது.
இறுதியாக இனி உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வீட்டில் எடுக்கும் சிறு சிறு பொருளாதார முடிவுகளையும் கூர்ந்து கவனிக்கும், அதற்கேற்ப அரசுகளும், மத்திய வங்கிகளும் கொள்கை முடிவுகளை எடுக்க இந்த மாடல் உதவும்.

