Last Updated:
நீடா அம்பானி கலாச்சார மையம் மூன்றாம் ஆண்டு விழா மும்பையில் கொண்டாடப்பட்டது, நிகழ்வில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் (NMACC) மூன்றாண்டுகளை நிறைவு செய்தது. இதனை கொண்டாடும் வகையில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான நிகழ்வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர் நீடா அம்பானி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தின் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்திய கலைகள் மற்றும் கலாச்சாரத்தை பாதுக்காக்கவும், அவற்றை உலக அளவில் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இந்த மையம் உருவாக்கப்பட்டது. இதன் மூன்றாவது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது.
நேற்று மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ரன்வீர் சிங், ஷாயித் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவரான நீடா அம்பானி, “நாங்கள் NMACC-ஐத் தொடங்கியபோது, இந்தியாவின் சிறந்தவற்றை உலகிற்குக் காட்சிப்படுத்துவோம் என்றும், உலகின் சிறந்தவற்றை இந்தியாவிற்குக் கொண்டு வருவோம் என்றும் ஒரு வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். இந்தியப் பாரம்பரியம் இன்னும் அதிகமாகப் பரவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து நீடா அம்பானி வெளியிட்டுள்ள சிறப்பு செய்தியில், இம்முயற்சியின் மையமாகத் திகழும் கலைஞர்கள், பார்வையாளர்கள் மற்றும் சமூகத்தினருக்கே சமர்ப்பணம். உங்களுக்கு எங்கள் நன்றி! நீங்கள் இல்லையெனில், இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது என குறிப்பிட்டுள்ளார்.


