நிசார் செயற்கைக்கோள் (NISAR Satellite) இந்தியா மற்றும் அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டுத் திட்டமாகும். இது இயற்கை வளங்கள், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றைப் பற்றி மிகவும் துல்லியமான தரவுகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
NISAR செயற்கைக்கோளின் சிறப்பு அம்சங்கள்:
இந்தியா – அமெரிக்கா கூட்டுத் திட்டம்
-
NISAR என்பது ISRO (இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்) மற்றும் NASA (அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம்) இணைந்து தயாரித்த முதல் பெரிய செயற்கைக்கோள் திட்டம்.
ஒப்பந்தமும் – பணி நிறைவும்
-
NISAR செயற்கைக் கோளுக்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30-ல் கையெழுத்தானது. பின்னர், ரூ.12,000 கோடியில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளின் தயாரிப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவுபெற்றன.
இரட்டை ரேடார் தொழில்நுட்பம் (Dual Frequency Radar)
-
இது L-Band (NASA) மற்றும் S-Band (ISRO) ரேடார்களை ஒரே செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருக்கிறது. இப்படி உருவாக்கப்பட்ட செயற்கைகோள்களில் உலகிலேயே இதுவே முதல் செயற்கைக்கோள்.
புவியியல் மாற்றங்களை கண்காணிக்கும்
-
பூமியின் நிலம், நிலச்சரிவு, பனிக்கட்டிகள் உருகுதல், நிலக்காட்சி மாற்றங்கள் போன்றவற்றை துல்லியமாக கண்காணிக்கும்.