• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Nirmala Sitharaman: இந்தியப் பொருளாதாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.. பங்குச்சந்தை சரிய இதுதான் காரணம்..! | Nirmala Sitharaman on Stock Market Fall: Easy Liquidity Driving FII Outflows Despite Strong Indian Economic Fundamentals

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Nirmala Sitharaman: இந்தியப் பொருளாதாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.. பங்குச்சந்தை சரிய இதுதான் காரணம்..! | Nirmala Sitharaman on Stock Market Fall: Easy Liquidity Driving FII Outflows Despite Strong Indian Economic Fundamentals
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Nirmala Sitharaman: இந்தியப் பொருளாதாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.. பங்குச்சந்தை சரிய இதுதான் காரணம்..!

இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தை எப்படி எளிதாக முதலீடு செய்கிறார்களோ, அதேபோல் நஷ்டம் அல்லது பொருளாதார அச்சம் ஏற்படும்போது எளிதாகவும், வேகமாகவும் பணத்தை வெளியே எடுத்துச் செல்கிறார்கள், மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டை வெளியேற்ற இது தான் காரணமே தவிரப் பொருளாதார அடிப்படை சிறப்பாக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்தியப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் கடந்த 2 வருடமாக லாபத்துடன் முடிக்க போராடி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து வர்த்தக பிரச்சனைகள், உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள போருக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. ஆயினும் சென்செக்ஸ், நிஃப்டி 12 சதவீதம் குறைந்துள்ளது.

Nirmala Sitharaman: இந்தியப் பொருளாதாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.. பங்குச்சந்தை சரிய இதுதான் காரணம்..!

இதுகுறித்து ஐஎம்எப் – வோர்ல்டு பேங்க் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகப்படியான பணப்புழக்கம், அதிகப்படியான நிதி ஆதாரம், பங்குச்சந்தையில் எளிதாக வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் அதிகளவில் முதலீடுகள் வெளியேறுவதாகத் தெரிவித்தார்.

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் சிறப்பாகவும், நிலையாகவும் இருக்கும் வேளையில் அதிகப்படியான முதலீட்டு வெளியேற்றத்தின் காரணத்தால் இந்திய ஈக்விட்டி சந்தை நடப்பு நிதியாண்டில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக விளக்கம் கொடுத்தார்.

அக்டோபர் 2024 முதல் இந்திய சந்தையில் இருந்து பன்னாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 63.6 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். இது சிறு தொகையல்ல கடந்த 9 வருடமாகப் பன்னாட்டு முதலீட்டாளர்கள் செய்த 63.5 பில்லியன் டாலரை காட்டிலும் அதிகமான தொகையும். 9 வருட முதலீட்டை 2 வருடத்தில் வெளியேற்றியுள்ளனர்.

இதில் 2026ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 32.8 பில்லியன் டாலரும், மார்ச் மாதத்தில் அதாவது அமெரிக்கா – ஈரான் போர் உச்சக்கட்டத்தை எட்டிய மாதத்தில் மட்டும் 12.7 பில்லியன் டாலர் முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.

மேலும் நிர்மலா சீதாராமன் இக்கூட்டத்தில் பேசுகையில், தற்போது ஏஐ பபுள் வெடிக்கும் அச்சம் உலகம் முழுவதும் இருக்கும் வேளையில், இந்தியா ஏஐ சார்ந்த முதலீடுகள் பெறாத நிலையில் இந்த பபுளில் சிக்காத பாதுகாப்பான சந்தையாக இந்தியா இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் கடந்த வாரம் நிர்மலா சீதாராமன் பங்குச்சந்தை முதலீடு மீதான வரியைக் குறைப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாகவும், இத்துறை சார்ந்தவர்களிடம் கருத்துக் கேட்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Share This Article

English summary

Nirmala Sitharaman on Stock Market Fall: Easy Liquidity Driving FII Outflows Despite Strong Indian Economic Fundamentals

Nirmala Sitharaman on Stock Market Fall: Easy Liquidity Driving FII Outflows Despite Strong Indian Economic Fundamentals — Nirmala Sitharaman: இந்தியப் பொருளாதாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.. பங்குச்சந்தை சரிய இதுதான் காரணம்..!

Story first published: Monday, October 19, 2026, 15:28 [IST]

Other articles published on Oct 19, 2026

Read More

Previous Post

ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு விவகாரம்: எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய அரச தரப்பு

Next Post

இத்தாலியில் பல்வேறு இடங்களில் போராட்டம்: இந்தியர்கள் கவனமாக இருக்க தூதரகம் அறிவுறுத்தல்… | Makkal Osai

Next Post
இத்தாலியில் பல்வேறு இடங்களில் போராட்டம்: இந்தியர்கள் கவனமாக இருக்க தூதரகம் அறிவுறுத்தல்… | Makkal Osai

இத்தாலியில் பல்வேறு இடங்களில் போராட்டம்: இந்தியர்கள் கவனமாக இருக்க தூதரகம் அறிவுறுத்தல்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin