Last Updated:
கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து கேரளாவில் நிபா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை ஒட்டிய பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழக கேரள எல்லை சோதனை சாவடிகளில் நிபா வைரஸ் கண்காணிப்பை தீவிர படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு கேரளா எல்லையான நாடுகாணி, தாளூர், பாட்டா வயல் உள்ளிட்ட 8 இடங்களில் தமிழக – கேரள எல்லை சோதனை சாவடிகள் உள்ளன.
இந்நிலையில், 8 சோதனை சாவடிகளிலும் நிபா வைரஸ் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கேரளாவில் இருந்து வரும் அனைவரையும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.
July 12, 2025 8:12 PM IST