Last Updated:
வெறும் பட்ஜெட் அறிவிப்புகளை மட்டும் பார்க்காமல், அரசின் ஒட்டுமொத்த செயல்பாடுகளைப் பார்த்து விமர்சியுங்கள்
மத்திய பட்ஜெட் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். நியூஸ் 18 க்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் அவர் பட்ஜெட் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
மத்திய பட்ஜெட் 2026-27 நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்தவகையில் மத்திய பட்ஜெட்டை தொடர்ச்சியாக 9 ஆவது முறையாக தாக்கல் செய்து சாதனை ஏற்படுத்தினார் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு பின் முதன் முறையாக நியூஸ் 18-ககு பிரத்யேக நேர்காணலை அவர் அளித்துள்ளார்.
நிதியமைச்சரிடம் நியூஸ் 18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு அளித்த பேட்டியின்போது, அவரிடம் பட்ஜெட் மீதான விமர்சனங்களை எப்படி கருதுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது-
உலகம் இதுவரை கண்டிராத அளவிலான பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சுங்க வரிப் போர்கள், நாடுகள் இடையிலான மோதல்கள் மற்றும் நிலையற்ற சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பாக வழிநடத்த ‘நிலையான தன்மை’ மிக அவசியம். அதற்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கிறது.
இது வெறும் ஒரு வருடத்திற்கான கணக்கு மட்டுமல்ல. 21-ம் நூற்றாண்டின் இரண்டாம் கால் பகுதியைத் தொடங்கும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
2047-ம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ (Viksit Bharat) என்ற இலக்கை அடைய வேண்டிய நீண்ட பயணத்தைக் கருத்தில் கொண்டே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


