புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் மீண்டும் அதே அணியில் தேர்தலை எதிர்கொள்வது மத்திய அமைச்சர் அமித் ஷா-வின் வருகையால் உறுதியானது.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் கடந்த முறையைப் போலவே, 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் களம் காணவுள்ளதாகவும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக, லஜக ஆகியவை தலா 2 தொகுகளிலும் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, என்.ஆர்.காங்கிரஸ், ஏனாம், லாஸ்பேட்டை, காரை வடக்கு. நெடுங்காடு ஆகிய தொகுதிகளிலும், தட்டாஞ்சாவடி, இந்திரா நகர், கதிர்காமம், ராஜ்பவன், அரியாங்குப்பம், ஏம்பலம், பாகூர், நெட்டபாக்கம் தொகுதிகளிலும் களம் காணும்.
மேலும் திருபுவனை, மங்கலம், வில்லியனூர் மற்றும் உழவர்கரையிலும் என். ஆர். காங்கிரஸ் போட்டியிடக்கூடும் எனத் தெரிகிறது.
இதேபோல் அதிமுகவிற்கு, உப்பளம் மற்றும் முத்தியால்பேட்டை தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கிறது.
பாஜகவிற்கு மண்ணாடிப்பட்டு, ஊசுடு, காலாப்பட்டு, காமராஜ் நகர் தொகுதிகளும்
நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, மணவெளி, நிரவியும் திருப்பட்டிணம், திருநள்ளாறு, காரை தெற்கு, உருளையன்பேட்டை மற்றும் மாஹே தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

